இயலவில்லை, காவேரி அவனை கஷ்டப்படுத்தினாலும் அவனுக்கென்று பொறுப்புணர்ச்சியும் குடும்பத்தின் மீது பற்றும் சந்நியாசி ஆக வேண்டும் என்ற நினைப்பில்லாமல் காவேரியுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பது இப்போது அவர்களுக்குப் புரிந்தது. காவேரி உண்மையில் கொம்பனுக்கு ஏத்தவள்தான் என அனைவருமே உணர்ந்தார்கள்.
அப்படியே நாட்கள் வேகமாகச் சென்றது
இப்போதெல்லாம் காவேரியின் மீது கொம்பன் வெறுப்பை காட்டவில்லை, அவள் தன் நன்மைக்குதானே இப்படியெல்லாம் நடந்துக் கொண்டாள் என்ற தெளிவு வரவும் அவள் என்ன கஷ்டப்படுத்தினாலும் அதை இஷ்டமுடன் ஏற்க ஏற்க காவேரியே தனது செயலில் மாற்றம் செய்தாள், அவனை கஷ்டப்படுத்தாமல் அவனுக்கு கணக்குபிள்ளை வேலையை தந்து ஓரிடமாக அமரவைத்தாள், அதோடு நிற்காமல் மேற்பார்வை பார்க்கும் பொறுப்பையும் தந்தாள், பழையபடியே வீட்டு வேலைகளுக்கு வேலைக்காரர்களை நியமித்தாள், அவளிடம் தெரிந்த மாற்றத்தைக்கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்துப் போனான் கொம்பன்.
அடிக்கடி வேலை செய்யும் கொம்பனை ரசித்துப் பார்க்கலானாள் காவேரி, அது தெரிந்தும் தெரியாதது போலவே அவளின் முன் அலைந்தான் கொம்பன், இவர்களின் செய்கையை தாமதமாக புரிந்துக் கொண்ட கணக்குபிள்ளையும் மனம் மகிழ்ந்தான்.
அன்று பார்த்து ஒரே மழை கொம்பன்தான் காவேரியை வீட்டிற்கு அழைத்து வந்தான், மழையில் இருவருமே நனைந்திருக்க வீட்டிற்கு வந்ததும் அவள் தன் அறைக்குச் சென்றாள், அவனோ தன் அறைக்குச் சென்றான் ஆனால் குத்தகை பணம் தன்னிடம் இருப்பதைக் கண்டு அதை அவளிடம் தர அவளது அறைக்கு வர அவளோ உடை மாற்றிக் கொண்டிருக்க ஒரு தர்மசங்கடமான நிலைமையில் இருவருமே ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டியதாயிற்று, சட்டென அவன் விலகி சென்றுவிட்டான், காவேரிக்கு கோபம் எழவில்லை அவனுக்கும் அது தவறு என தோன்றவில்லை, எதிர்பாராமல் நடந்ததை அப்படியே இருவரும் மறந்துப் போனதுதான் ஆச்சர்யம்.
தொடரும்...
Go to Indru nee naalai naan story main page
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.