(Reading time: 23 - 46 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”மரம் ஏறத்தெரியுமா உனக்கு”

  

”ஓரளவுக்கு”

  

”அப்ப மரம் ஏறி தேங்காய்களை இறக்கு இதப்பாரு இளநீயை வெட்டிடாத முத்தின தேங்காயை இறக்கு சீக்கிரம்”

  

”எத்தனை மரத்தில ஏறனும்”

  

”இங்கிருக்கற எல்லா மரத்திலயும் ஏறனும்”

  

”எல்லாத்திலயுமா ஒரே நாள்ல முடியாதே“

  

”பரவாயில்லை ஒரு நாளுக்கு 20 மரம்னு எடுத்துக்க காய்களை இறக்கி லோடு ஏத்தி மார்க்கெட்டுல வித்துட்டு பணத்தோட வா ஒவ்வொரு காயும் 30 ரூபாய்க்கு வித்துடு”

  

”30 ரூபாய்க்கா இது அநியாயம்”

  

“30 ரூபாய்ல இருந்து ஆரம்பி அப்பதான் வியாபரிங்க 20 ரூபாய்க்கு வருவாங்க நாமளும் 10 ருபாய் லாபம் பார்க்கனும்ல”

  

”எனக்கு இந்த வியாபாரம் பேச வராது”

  

”கத்துக்க வேலைக்கு வந்துட்டல்ல, பணம் தேவைப்படுதுல்ல முதலாளி என்ன சொன்னாங்களோ அதை செய்யனும் புரியுதா” என சொல்ல அவனோ நொந்துப் போய் வரிசையாக இருந்த தென்னைமரங்களைப் பார்த்தான்.

  

அவனும் மரங்களை ஏறியிருக்கிறான் ஆனால் இப்போது சற்று தயங்கினான் ஆனாலும் வேலைக்கு வந்தாயிற்று காவேரியைப் பார்த்தான், அவளோ நக்கலாக சிரிக்க அதற்கே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.