கொண்டிருந்தாள்.
“தேங்க்ஸ் மிஸ். இவ்வளவு ஈசியா இருக்கு!” வாயெல்லாம் பல்லாக ஷாலினி சொன்னதில் இருந்து மேத்ஸ் விஷயம் என்பது சத்யாவிற்கு புரிந்தது.
சத்யாவை கவனித ஷாலினி, “அம்மா, மிஸ் உங்களை தேடி வந்தாங்க. நீங்க இல்லைன்னு சொல்லிட்டு, அப்படியே என்னோட மேத்ஸ் டவுட்டையும் கேட்டேன்,” என்றாள்!
“கதவை திறக்குறதுக்கு முன்னாடி யாருன்னு பார்த்துட்டு திறந்தீயா?” என மகளிடம் வினவினாள் சத்யா.
“ஜன்னல வழியா பார்த்து, பேசிட்டு தான்ம்மா திறந்தேன்!”
“அப்போ சரி!”
ஷாலினி ஹோம்வொர்க் செய்கிறேன் என்று போய்விட, சத்யா அஹல்யா பக்கத்தில் அமர்ந்தாள்.
“என்னை தேடி வந்தீங்களா அஹல்யா?”
“ஆமாம்! நான் இங்கே தங்கி இருக்குறதுல உங்களுக்கு நிறைய சிரமம். வேற வீடு பார்க்க அவர் கிட்ட சொல்லி இருக்கேன். உங்க கிட்ட முதலேயே சொல்லி வைக்கலாம்னு நினைச்சேன்!”
“அவர் கிட்டனா, அபினவ் கிட்டயா? அவன் அப்படி வீடு பார்த்திருவானா???”
“இல்லை! இன்னைக்கு நான் தங்கி இருந்த பழைய வீட்டுல யாரோ திருடங்க வந்திருக்காங்க!”
“திருடங்களா? இரண்டு மூணுப் பேரா? உங்களுக்கு தெரியுமா??”
“எத்தனை பேருன்னு எல்லாம் தெரியலை. ஆனால் வீட்டுல இருந்த எல்லாத்தையும் எப்படி