(Reading time: 26 - 51 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”மன்னிச்சிடுங்க”

  

”மன்னிப்பெல்லாம் என்னத்துக்கு, நீங்க என்ன நினைச்சி இவளை கூட்டிட்டு வந்தீங்களோ ஆனா அவள் உங்க எண்ணத்தை நிறைவேத்தாம எல்லாரையும் ஏமாத்திட்டா துரோகி” என சொல்ல துடித்துப் போனாள் மஹதி. கண்கள் கலங்கி கண்ணீர் தாரைதாரையாக வழிந்தது.

  

வேணியோ மஹதியின் அழுகையைக்கண்டு கலங்கி அவளுக்கு ஆதரவாக நின்றார்

  

”மஹதி அழாதம்மா விடு, இப்ப என்ன நீ நடத்தின நாடகம் தெரிஞ்சிடுச்சி அதானே, சரி பரவாயில்லை என் பொண்ணு தலையெழுத்து எப்படியோ அதுபடி நடக்கட்டும், நீ வாம்மா நாம கிளம்பலாம்” என அழைக்க அதற்கு வீரசிங்கமோ

  

”நாடகம்லாம் நல்லாதான் இருந்தது, ஆனா நடிக்கறேன்னு சொல்லிட்டு உண்மையாவே வேங்கையனை விரும்ப ஆரம்பிச்சிட்டா” என சொல்ல குபேரனும் வேணியும் அதிர்ந்து மஹதியைப் பார்க்க அவளோ கண்ணீருடன் கைகூப்பி நின்றாள், அவர்களோ கோபித்துக் கொள்ளவில்லை. மாறாக குபேரன் வீரசிங்கத்திடம்

  

”இதுல என்னங்க தப்பிருக்கு, என்னிக்கிருந்தாலும் ஜானகி வேங்கையனை விட்டுட்டு போகப் போறா, அவள் இடத்தில இவள் இருக்கறதால என்ன தப்பிருக்கு”

  

”நீங்க புரிஞ்சிதான் பேசறீங்களா அவள் எதுக்கு வந்தா, ஜானகியையும் வேங்கையனையும் சேர்த்து வைக்க ஆனா அப்படி நடந்துக்காம அவளே வேங்கையனை விரும்பினா இதுக்கு அர்த்தம் என்ன”

  

”வேங்கையனோட நல்ல மனசு புரிஞ்சிக்கிட்டு உதவி செய்ய நினைச்சா ஆனா பாவம் அவளுக்கு தெரியாம அவளே காதல்ல விழுந்துட்டா, இது தப்புன்னு பட்டா அவள் சார்பா நாங்க மன்னிப்பு கேட்கறோம்” என வேணி சொல்லி கைகூப்ப வர அதற்குள் தடுத்தாள் மஹதி

  

”வேணாம் ஆன்ட்டி இதுல உங்க மேல தப்பில்லை என் மேலதான் தப்பு, நான் முதல் முதல்ல

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.