”உனக்கு ஏதோ பிரச்சனை அந்த விரக்தியில இப்படி பேசி வைக்காத”
“அப்படியெல்லாம் இல்லை தாத்தா நான் இருக்கற உண்மையை சொன்னேன்”
”ஓ அப்படியா சரி ஒரு பந்தயம் வைச்சிக்கலாம் ஒருவேளை கல்லூரியில நடந்த பரிட்சையில எல்லா மாணவர்களும் பாஸாயிட்டா நான் சொல்றதை நீ மறுக்காம செய்யனும்”
”ஓஹோ என்ன மிரட்டறீங்களா”
”அப்படித்தான் வைச்சிக்க”
”எதுக்கு மிரட்டனும் என்ன செய்யனும்னு சொல்லுங்க செய்துட்டுப் போறேன்“
”எல்லாம் உன் கல்யாண விசயமாதான்”
”என்னது கல்யாணமா”
“ஆமாம் இன்னும் எத்தனை நாள் நீ இப்படியே இருப்பியாம், உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சித் தரவேண்டியது என்னோட கடமை”
”என் கல்யாணம் என் விருப்பம் அதுல நீங்க தலையிடாதீங்க”
”வார்த்தையை அளந்து பேசு நான் உன்னோட தாத்தா”
”இது என் வாழ்க்கை”
”உன் வாழ்க்கை மேல இருக்கற அக்கறையிலதான் நான் இப்படி பேசறேன்“
”என்னால நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் செய்துக்க முடியாது”