(Reading time: 23 - 46 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

”நான் சொன்னது சொல்லிட்டேன் என் மேல உனக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தா நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கனும்”

  

”கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்துக்கிட்டா வாழ்க்கை நரகமாயிடும்”

  

”வாழ்க்கையை நரகமாக்கறதும் சொர்க்கமாக்கறதும் உங்க கையிலதான் இருக்கு மனசு வைச்சா போதும் நீ போகலாம்” என சொல்ல அவளோ பலத்த சிந்தனையுடன் சென்றாள்.

  

அதோடு ஈஸ்வரமூர்த்தியும் தன் வீடு திரும்பினார்.

  

அன்றைய நாள் மாலை நேரத்தில் கோவலன் மாதவியை தேடி அவளது வீட்டிற்கே வந்துவிட்டான், நல்லவேளை அந்நேரம் கண்ணகி அங்கு இல்லை, அவள் இன்னும் கல்லூரியில் வேலை செய்துக் கொண்டிருக்க கோவலனைக்கண்டதும் மாதவி அதிர்ந்தாள்

  

”நீங்களா இங்க என்ன செய்றீங்க”

  

”உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்”

  

”எதுக்கு நான்தான் உங்ககிட்ட வேலை செய்யலையே”

  

”ஆமாம் அதான் எனக்கு கஷ்டமாயிருக்கு, நீயில்லாம என்னால வேலை செய்ய முடியலை”

  

”ப்ச் இதப்பாருங்க எனக்கு இப்ப ஒரு நல்ல வேலை கிடைச்சிருக்கு, மாணவர்களுக்கு பாடம் எடுக்கறது எனக்கு பிடிச்சிருக்கு, அந்த வேலையை விட்டுட்டு என்னால உங்ககிட்ட வரமுடியாது கோவலன் என்னை மன்னிச்சிடுங்க”

  

”உன் வாயில என் பேரை கேட்க எவ்ளோ சுகமா இருக்கு தெரியுமா”

  

”நீங்க கிளம்பறீங்களா”

  

2 comments

  • மிக்க நன்றி, எங்க கோவலன் பேராசியரா வந்து ரொமான்ஸ் பண்ற மாதிரி கதை போயிடுமோனு பயந்தேன். நல்லவேளை அப்படி எதுவும் ஆகல, அதுக்கே மிக்க நன்றி

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.