”முடியாது நான் வந்தது உன்னை மறுபடியும் என்கிட்ட வேலைக்கு சேர்த்துக்க இல்லை உன்கிட்ட மனசு விட்டு பேச வந்தேன்”
”என்ன விசயம்”
”எனக்கு உன்னை பிடிக்கும் மாதவி“
”போதும் கோவலன் இதோட இதை நிறுத்திக்கலாம் கிளம்புங்க”
”ஏன் என்னை விரட்டற நான் சொல்றதை முழுசா கேளு என்னை நம்பு”
”போதும் உங்களால ஒரு பொண்ணை கூட காப்பாத்த முடியலை உங்களை நான் நம்பனுமா”
”கண்ணகியை காப்பாத்த முடியாம போனது என்னோட தப்புதான் ஆனா அதுக்கான முயற்சிகளை நான் எடுத்தேன் மாதவி”
”போதும் நீங்க போகலாம்”
”என்னை விரட்டாத, நான் சொல்றதைக் கேளு நான் உன்னை விரும்பறேன்” என சொல்ல மாதவி அதிர்ந்தாள் கோவலனோ பிச்சை எடுப்பது போல அவளிடம் கெஞ்சினான்
”சத்தியமா சொல்றேன், நீயில்லாத வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலை, ப்ளீஸ் என்னை ஏத்துக்க மாதவி” என கெஞ்ச அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
”ப்ளீஸ் வெளிய போங்க அக்கம் பக்கம் வீட்டுக்காரங்க பார்த்தா என்னைத்தான் தப்பு சொல்வாங்க”
”சரி சரி என் மனசுல இருக்கறதை உன்கிட்ட சொல்லிட்டேன் இனி நீதான் முடிவு சொல்லனும், உன் முடிவுக்காக நான் காத்திருப்பேன் மாதவி ப்ளீஸ்” என கெஞ்சிவிட்டு