”ஓ அப்படியா ரொம்ப வசதியா போச்சி ஆமா மாப்பிள்ளையை உள்ள வைச்சிக்கிட்டு நீ எதுக்கு இங்க உட்கார்ந்திருக்க தனிமையில லவ் ஃபீல் பண்றியா“
”அது ஒண்ணுதான் இங்க குறைச்சல்”
”ஓ இல்லையா அதுசரி உனக்குதான் காதல்னாலே என்னன்னு தெரியாதே பழிவாங்கறதுன்னா உடனே தெரியும்”
”போதும் பேசாத எனக்கு கோபம் அதிகமாகுது”
”சரி சரி நான் போய் உனக்கான மாப்பிள்ளையை பார்த்து பேசிட்டு வரேன்” என சொல்லிவிட்டு கொம்பன் உள்ளே உற்சாமாக செல்ல அவளுக்கு அழுகையே வந்தது.
கொம்பனும் ஒரு வேகத்துடன் உள்ளே சென்றானே தவிர அடுத்த அடி எடுத்து வைக்க இயலவில்லை, மனம் கனத்துப் போய் நடக்க முடியாமல் தடுமாறி ஒரு இடத்தில் அமர்ந்துவிட்டான், வெளியே காவேரி கண்கள் கலங்கிக் கொண்டிருக்க உள்ளே கொம்பன் குமுறிக் கொண்டிருக்க இதைக்கண்ட சண்முகம் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து கொம்பனே கண்ணீரை துடைத்துக் கொண்டு வெளியே வர காவேரி நின்றாள்
”என்ன கொம்பா பார்த்திட்டியா” என கேட்க அவளின் கண்கள் கலங்கியிருப்பதைக்கண்டு மனம் இரங்கினாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல்
”ஓ மாப்பிள்ளை சூப்பரா இருக்காப்ல” என பொய்யாக சொன்னான் அவனது கண்களும் கலங்கிதான் இருந்தது
”உனக்கு பொய் சொல்ல நல்லா வருது கொம்பா”
”பொய்யா என்ன சொல்ற”