என பார்த்து வைத்த மணப்பெண் அழகாக அலங்காரத்தில் இருந்தாள், அவளைக்கண்டதும் அநியாயத்திற்கு கோபம் கொண்டாள் காவேரி அதே போல காவேரி பக்கத்தில் அவளுக்கு என பார்த்து வைத்த மணமகன் அலங்காரத்துடன் இருக்கவும் அவனை கொல்லும் அளவு கோபத்தில் முறைத்துப்பார்த்தான் கொம்பன்.
இருவரின் செயலையும் மற்றவர்கள் கவனித்துக் கொண்டும் கவனிக்காதது போலவே நடந்துக் கொண்டார்கள். அந்த ஊர்வலமும் ஆமை வேகத்தில் கோயிலை அடைந்தது. அதற்குள்ளேயே கண்களால் கொம்பனும் காவேரியும் பேசிக் கொண்டார்கள் மற்றவர்களுக்கு கேளாமல் மெதுவாக
கொம்பனோ
”பார்த்தியா என் ஆளை” என்றான் அவளோ இளப்பமாக சிரித்து
”போடா என் ஆளை பாரு எப்படி”
”சே சே நல்லாவேயில்லை”
”உன் ஆளும் நல்லாயில்லை”
”இவனை கல்யாணம் செய்து அவனையும் பழிவாங்கப் போறியா”
”சே சே இல்லையே இவன்கூட சேர்ந்து ஜாலியா வாழப்போறேன்”
”அப்படியா சூப்பர் நான்கூட உன்னோட இருந்து இருந்து நொந்துப் போயிட்டேன், இந்த பொண்ணை பார்த்ததும் வாழனும்ங்கற ஆசை வந்துடுச்சி நானும் இவள்கூட புது வாழ்க்கை வாழப்போறேன் அதுவும் எப்படி ஜாலியா” என்றான் அதைக்கேட்டு அவள் கோபம் கொண்டாள்
”என்ன கோபமா பொறாமைபடாத உன்னை விட என் வாழ்க்கை சூப்பரா அமையுதுன்னு வயிறு எரியாத சரியா”