(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”உனக்கும் கல்யாணம் ஆகலை எனக்கும் கல்யாணம் ஆகலை அப்ப அந்த கெட்டிமேளம் சத்தம் யாரோடது”

  

”எங்களோடது” என சொல்லிக் கொண்டே வந்தார்கள் கல்யாண ஜோடி.

  

காவேரிக்காக பார்த்து வைத்த மாப்பிள்ளையும் கொம்பனுக்காக பார்த்து வைத்த மணமகளும்தான் கல்யாண ஜோடியாக திருமண கோலத்தில் நின்றிருந்தார்கள், அவர்களை கண்டதும் இவர்களுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, சட்டென தங்களின் பெற்றோரை பார்க்க அவர்களோ கிண்டலாக சிரிக்க அதில் இவர்கள் அசடு வழிந்தார்கள்.

  

ஐயரோ

  

”அசடு வழிஞ்சது போதும்” என்றார் கொம்பனோ

  

”அப்ப இது நிஜமான கல்யாணமா“

  

”ஆமாம்”

  

”ஆனா எங்களுக்குதான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி இது எதுக்கு” என கேட்க அதற்கு ஐயரோ

  

”தம்பி ஏற்கனவே உங்களுக்கு கல்யாணம் ஆனது வாஸ்தவம்தான் ஆனா அது நல்ல நேரத்தில நடக்காததால உங்க வாழ்க்கையில பல இன்னல்கள் வந்திருக்கு, நீங்களும் கஷ்டப்பட்டிருக்கீங்க, அதனாலதான் உங்க பெற்றோர்கள் இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தாங்க, முறைப்படி மந்திரம் முழங்க முகூர்த்த நேரத்தில உங்களுக்கு கல்யாணம்  ஆனா நீங்க ஒத்துமையா வாழ்வீங்க, எல்லா சௌபாக்கியத்தோடவும் 16 செல்வங்களோடவும் வாழ்வீங்க, அதுக்குதான் இந்த ஏற்பாடு ஆனா நீங்களே இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னா எப்படி, பேசாம இந்த கல்யாணத்தை நிறுத்திடலாமா” என கேட்க

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.