(Reading time: 21 - 42 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அய்யோ” என இருவருமே அலறினார்கள் கொம்பனோ

  

”கல்யாணத்தை நிப்பாட்ட வேணாம்” என்றான் காவேரியோ

  

”ஆமாமாம் நாங்க கல்யாணம் செய்துக்கறோம்” என்றாள் இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்து அடுத்த நொடியே வெட்கப்பட்டு தலைகுனிய சண்முகமோ ஐயரிடம்

  

”ஐயரே முகூர்த்த நேரம் ஓடுது சீக்கிரமா கல்யாணம் நடத்தி வைங்க” என சொல்ல அதற்கு ஐயரோ

  

”ஏற்கனவே பொண்ணு கழுத்தில தாலியிருக்கறதால மாலை மாத்திண்டா போதும் அதுவே கல்யாணம் ஆனதுக்கு சமம்” என சொல்ல அனைவரும் ஒப்புக்  கொண்டார்கள் அதன்படி கொம்பனிடம் ஒரு மாலையும் காவேரியிடம் ஒரு மாலையும் தரப்பட்டது. இருவரும் இப்போது சிரித்த முகத்துடனே ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருக்க ஐயரோ

  

”பார்த்த வரைக்கும் போதும் மாலையை மாத்திக்குங்க” என சொல்ல அவர்களும் சிரித்த முகத்துடனே மாலையை மாற்றிக் கொண்டார்கள்.

  

வந்திருந்த அனைவரும் அட்சதை தூவி ஆசிர்வாதம் செய்தார்கள், ஊரறிய முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது, இதில் இருவரின் பெற்றோர்களுக்கும் அப்படியொரு ஆனந்தம், மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.

  

திருமணம் முடிந்து அனைவரும் விருந்து உண்டபின் முறைப்படி காவேரி கொம்பனின் வீட்டிற்குள் மருமகளாக அடிஎடுத்து வைத்தாள், அவர்களை அன்பாக வரவேற்று பால் பழம் சம்பிரதாயம் முடித்தார்கள் பெரியவர்கள், அந்த வீடே கலகலப்பாக மாறிவிட்டது.

  

காவேரியிடம் இப்போது எந்த பழிவாங்கும் உணர்வும் இல்லை, கொம்பனிடம் எந்த வெறுப்பும் இல்லை, இருவருமே அன்னியோன்யமாக ஏதோ பல வருடங்கள் கணவன்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.