”என்னடா திருச்சிக்கா” என கேட்க மூர்த்தியோ அச்சத்துடனே பேசிவைத்தான்.
”ஆமாம்”
”எங்க வீட்டு சின்ன மருமகள் வீட்டுக்குதானே போற”
”இல்லை மஹதி வீட்டுக்கு”
”ரெண்டும் ஒண்ணுதானே”
”அதான் கிடையாது நான் போய் அவள் வீட்ல பேசி கல்யாணம் செய்துக்கப் போறேன்”
”அதுக்கு நான் விட்டாதானே”
”என்ன விளையாடறீங்களா”
”ஏன்டா நீதான் வேணும்னு ஒருத்தி உன் வீட்ல தங்கியிருக்காளே அவளை என்ன செய்யப் போற”
”இந்நேரம் அவள் தெருவில இருப்பா எப்பவோ அவளை விரட்டியாச்சி“
”அவளை விரட்டிட்டு கோழை மாதிரி உன் அப்பா அம்மாவை பஸ் ஏத்தி வேற ஊருக்கு அனுப்பிட்டு வர்ற போல”
”அது என் இஷ்டம் உங்களுக்கு என்ன”
”என்னவோ போ நீ செய்ற விசயம் ஜானகிக்கு தெரிஞ்சது பேயாட்டும் ஆடுவா அவள்கிட்ட சொல்லவா” என கேட்க உடனே மூர்த்தி அச்சத்துடன் அவரின் பக்கத்தில் அமர்ந்து