(Reading time: 23 - 45 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”இதப்பாருங்க நாம ரெண்டு பேருமே ஒரே எண்ணத்தோட போறோம்”

  

”அதான் இல்லை மஹதி உன்னை விரும்பலை வெறுக்கறா என் பையனை விரும்பறா”

  

”என்னதான் இருந்தாலும் நடந்த விசயத்தை சொன்னா கண்டிப்பா மஹதி வீட்ல உங்களை சேர்த்துக்க மாட்டாங்க, நான் எப்படியாவது பேசி அவங்க மனசுல இடம்பிடிச்சி வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம் செய்துக்கப் போறேன்”

  

”அடடே ரொம்ப வேகமா இருக்கியே பார்த்துடா வேகத்தடை போல ஜானகி குறுக்க வந்து நிக்கப் போற”

  

”பார்க்கலாம் பார்க்கலாம்” என எகத்தாளமாக சொன்னான் மூர்த்தி

  

பஸ்ஸும் கிளம்பியது.

  

பல மணி நேரத்திற்கு பின் திருச்சியை அடைந்தார்கள் இவ்விருவரும் நேராக மஹதியின் வீட்டிற்கு சென்றார்கள், அங்கு மஹதியின் அப்பா அம்மா மிகவும் மென்மையானவர்களாக இருந்தார்கள், அவர்களிடம் இவர்கள் நடந்ததை ஆளுக்கொரு பக்கமாக சொல்ல அவர்கள் மிரண்டார்கள், தன் மகளின் வாழ்க்கையை நினைத்து அஞ்சினார்கள், குழம்பினார்கள் கவலைபட்டார்கள். அவர்களால் எந்த முடிவையும் எடுக்க இயலவில்லை, அதற்காக ஓய்ந்துப் போகவில்லை வீரசிங்கமும் மூர்த்தியும் ஆளுக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு  மஹதிக்காக பேசினார்கள்

  

மறுபக்கம் இரவாகியும் மூர்த்தி வராமல் போகவே பயந்தாள் ஜானகி, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவளை பற்றி கதை கட்டலானார்கள், அவளுக்கும் கோபம் வந்தது, அதில் அவளே ஒரு முடிவுடன் மூர்த்தி வேலை செய்யும் வங்கிக்கு சென்று பார்த்தாள், அங்கு அவன் வரவில்லை என சொல்லவும் அதிர்ந்து தெருவில் நடந்துவர ஊர்க்காரன் ஒருவன் மூர்த்தியின் பெற்றோர் சிவகங்கைக்கு சென்ற விவரத்தை சொல்ல அவள் அரண்டுப் போனாள்

  

இனி எங்கு தங்குவது என ஒரு நொடி பயந்தாள், தன் தாய் வீட்டிற்கு செல்வோமா என்று கூட

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.