சொல்லிக் கொண்டிருக்க, செல்வம் கடுப்பாகி தன் மனைவியை திட்டினார்.
ஏற்கனவே மூரத்தி சொன்னது போல இவ்விருவரும் சேர்ந்து ஜானகியை இழுத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்தி பூட்டிவிட்டு
”இதப்பாருடி இப்படியே போயிடு மறுபடியும் உன் கால் கூட எங்க வீட்ல படக்கூடாது”
”என்னை வெளிய தள்ளிட்டு நீங்க எங்க போறீங்க”
”நாங்களா ஆத்துலயோ குளத்துலயோ விழுந்து சாகப்போறோம் போதுமா”
”மாமா வந்தா என்ன செய்றது”
”அவன் வர்றப்ப நாங்க வருவோம்”
”ஓஹோ அப்படியா”
”ஆமாம் பொழுதன்னிக்கும் உன்னை யார் சமாளிக்கறது, நாங்க சொந்தக்காரங்க வீட்ல போய் தங்கிட்டு மூர்த்தி வந்த பின்னாடி வரோம், அதுவரைக்கும் இங்கயே நின்னு ட்ராமா போடாம ஒழுங்கா உன் வீடு போய் சேரு”
”வீடா இதுதான் என் வீடு, நான் எங்கயும் போக மாட்டேன் நீங்க வர்றவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்” என சொல்லிவிட்டு திண்ணையில் அமர்ந்தாள்.
அவர்களோ அவளை அப்படியே அம்போ என விட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்கள்.
தனித்தனியாக சென்றாலும் அனைவரும் பஸ் நிலையத்தில் ஒன்று கூடினார்கள், மூர்த்தியே தனது பெற்றோரை சிவகங்கை செல்லும் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினான், அதே பேருந்தில் வீரசிங்கமும் இருந்தார், அவரைக்கண்டதும் இவன் திடுக்கிட்டான். அவரோ