நினைத்தாள், ஆனால் அதற்கு தைரியம் வரவில்லை மாறாக என்ன செய்வதென தெரியாமல் தெருவில் அநாதையாக நடந்தபடி இருந்தவளை கண்டுக் கொண்டான் வேங்கையன்.
அவனும் வீட்டிற்குச் சென்றான், அங்கு மஹதி இருக்க அவளை கண்ட அவனுக்கு வெறுப்பே வந்தது, அதனால் நிலத்திலேயே தங்கிவிட்டான். இரவு நேரம் வீட்டில் பெண்கள் தனியாக இருப்பார்களே என அச்சம் கொண்டு பாதுகாப்பு கருதி திண்ணையில் படுத்து காவல் காக்கலாம் என்ற எண்ணத்தில் வீடு நோக்கி வந்தவன் அங்கு ஜானகி வருவதைக்கண்டு வியந்தான்.
அவனது மனதில் அவள் மனைவி என்ற எண்ணம் இல்லை, குபேரனின் மகள் என்ற எண்ணம் மட்டும் இருந்தது, அதனால் அவன் தைரியமாக பேசினான்
”ஜானகி இங்க என்ன செய்ற” என கேட்க அவளோ தயங்கி நின்றாள்
”என்ன அப்படி பார்க்கற, நான் ஒண்ணும் பொண்டாட்டின்னு உரிமை கொண்டாடிக்கிட்டு உன்கிட்ட பேச வரலை, இந்த ராத்திரி நேரத்தில ஊரே அடங்கிப் போன வேளையில தனியா நடந்து வர்றியே அதான் கேட்டேன்” என சொல்லவும் உடனே அவள் அழுதபடியே நடந்ததை சொல்ல அவனுக்கு கஷ்டமாகிப் போனது
”எங்க போறதுன்னு தெரியலை” என சொல்ல அவனோ தயங்காமல்
”வா நம்ம வீட்டுக்கு போகலாம்”
“உங்க வீட்டுக்கா”
”அட வாம்மா, சொந்தக்காரங்க வீடுன்னு நினைச்சிக்க, நான் வெளிய திண்ணையில படுத்துக்கறேன், எங்கப்பா வேற வெளியூர் போயிருக்காரு 2 நாள் ஆகும் வர்றதுக்கு”
”அப்படியா ஆனா அங்க மஹதி இருப்பாளே“