(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”என்ன உளர்ற உனக்கில்லாத தகுதியா, நீ இந்த வீட்டுக்கு ஒரே வாரிசு“ என அகத்தியனின் தந்தை பொன்முடி கோபமாக கேட்க

  

”அதுதான் எனக்கு கஷ்டமாயிருக்குப்பா, எனக்கு தந்த கார் மேல என்னால உரிமை கொண்டாட முடியலையே, எனக்கு பிடிச்ச டிரைவரை நியமிக்க முடியாதப்ப அந்த கார் எனக்கெதுக்குப்பா”

  

”நீ யாரை டிரைவர் வேலையில சேர்த்திருக்கன்னு தெரியுமா” என தாத்தா கர்ஜிக்க

  

”ஓ தெரியுமே வீரா நல்லவன்”

  

”அவன் நல்லவனோ கெட்டவனோ, நம்மாளுங்க கிடையாது”

  

”புரியலை”

  

”டிரைவரா இருந்தாலும் நம்மாளுங்களை வைச்சிக்கறதுதான் சரி”

  

”எது சரி எது தப்புன்னு முடிவு எடுக்கற அளவுக்கு நான் வளர்ந்துட்டேன் தாத்தா, எனக்கு எது சரின்னுபடுதோ அதைதான் நான் செய்வேன்”

  

”அதுக்காக வீராவை வீட்டுக்குள்ள விடறதா”

  

”சே சே அவன் காருக்குதான் டிரைவர், வீட்டுக்குள்ள வரமாட்டான்“

  

”நம்ம காம்பவுன்ட்க்குள்ள அவன் இருக்கறது எனக்கு அவமானமா இருக்கு, முதல்ல அவனை வெளிய அனுப்பு”

  

”தாத்தா இதோடு நிப்பாட்டிங்குங்க, வீரா இருக்கறதால என்னத்த அவமானம் வந்துடப்போகுது, எல்லாரையும் மனுஷங்களா பாருங்க உங்க பார்வை கோணத்தை மாத்தினாலே போதும்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.