(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”அவனை இப்படியே விட்டுக்கிட்டு இருந்தா ஒருநாள் ஊரே நம்மளை எதிர்த்து நிக்கும், அவனுக்கு புரிய வைச்சி திருத்தற வழியைப் பாரு” என கர்ஜிக்க பொன்முடியும் பவ்யமாக சரிசரியென தலையாட்டிவிட்டு அகத்தியனை பார்க்க அவன் எப்போதோ அவ்விடம் விட்டு வெளியேறி இருந்தான்.

  

அச்சமயம் அகத்தியன் அங்கு இல்லாமல் போனது கூட தாத்தாவின் கோபத்தை அதிகரிக்கவே வைத்தது.

  

அகத்தியனும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் குளித்து ரெடியாகி சாப்பிட்டு கார்மென்ட்ஸ்க்கு கிளம்ப வீட்டை விட்டு வெளியேறினான்.

  

வீரா புது காரை ஒரு துணியால் துடைப்பதைக் கண்டபடி கேட்டிற்கு பின்னால் பழைய டிரைவர் கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். எதேச்சையாக அவனைக் கண்டதும் அரண்டான் வீரா. இவ்விருவரையும் கண்டபடி வந்த அகத்தியனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்

  

”வீரா வண்டியை எடு, கார்மெண்ட்ஸ்க்கு போகனும்” என அதட்ட அதில் வீராவும் பதட்டமாக அகத்தியனுக்காக கார் கதவை திறந்துவிட அகத்தியன் காருக்குள் பின் சீட்டில் அமர்ந்துக் கொண்டான், வழக்கம் போல முன்சீட்டில் அங்கமுத்து வந்து அமர வர அவருக்காக வீரா கதவை திறக்க அங்கமுத்துவோ சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு காருக்குள் அமர்ந்தார். வீராவும் அங்கமுத்துவின் கோபத்தைக் கண்டு சற்று பதட்டத்துடனே காருக்குள் ஏறி வண்டியை ஓட்டினான்.

  

தன்னை மதித்து தந்த இந்த உயர்ந்த பதவிக்காக அந்த காரை அவ்வளவு மென்மையாக கையாண்டான் வீரா. அவனது ஓட்டும் திறமையைக் கண்ட அகத்தியனோ

  

”பரவாயில்லை காரை நல்லாதான் ஓட்டற, வீதியில போற மாதிரியில்லை ஏதோ வானத்தில பறக்கற மாதிரியிருக்கு” என சொல்ல வீராவிற்கு உற்சாகம் தாளவில்லை, மென்மையாகச் சிரிக்க அந்த சிரிப்பை வெறுத்த அங்கமுத்துவோ கோபத்தில் உரும அந்தச் சத்தம் கேட்டு வீரா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.