”என்னப்பா சொல்ற உன்னால முடியுமா”
”கண்டிப்பா முடியும் நாச்சியா மட்டும் ஒரே ஒரு தப்பு செய்யட்டும், அதை வைச்சே அவளை ஊருக்கு நேர்ந்துவிடறேன்”
”என்னடா உளர்ற ஊர்க்கு நேர்ந்துவிடறதுக்கு அவள் என்ன ஆடா மாடா”
”இதுவே அந்த காலமா இருந்திருந்தா தாசியா ஆக்கியிருக்கலாம், காலம் மாறிடுச்சி மாறினா என்ன அவளை தாசியாக்காம நான் விடமாட்டேன்”
”பிரச்சனையை பெரிசாக்கற, இதோட இந்த பேச்சை விட்டுடு”
”முடியாது நான் சொன்னதை செய்வேன் ஏன் உனக்கும் அவள் மேல ஒரு கண்ணு இருக்குல்ல, உனக்கு ஆசையில்லையா” என கேட்க அவனோ கேவலமாக சிரிக்க அதில்
”அப்புறம் என்ன பொறு நாச்சியா ஒரு தப்பு செய்தாலும் நமக்குதான் லாபம், அவளை கவனமா பார்த்துக்கிட்டே வரலாம்” என சொல்ல அதற்கு அங்கு கூடியிருந்த அனைத்து ஆண்களும் சரியென தலையாட்டி வைத்தார்கள். இது எதுவும் அறியாத நாச்சியாவோ கார்மென்ட்ஸில் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
பழைய டிரைவரோ தனது சகாக்களுடன் ஓரிடம் கூடி அகத்தியனை திட்டி தீர்த்து முடித்தான்
”எவ்ளோதான் நீ பேசினாலும் உன்னால என்ன செய்ய முடியும், விட்டுத்தள்ளு வேற வேலையை பாரு, டிரைவர் வேலை இல்லைன்னா என்ன போனா போகுது”
”முட்டாள்களா டிரைவர் வேலைன்னா என்னன்னனு நினைச்சீங்க டிரைவரா நாம வண்டி ஓட்டறப்ப நாமளே பெரியாளுன்னு நினைப்பு வரும், நம்மளை நம்பித்தான் ஆளுங்க தைரியமா வண்டியில ஏறுவாங்க, அதுலயும் பெரிய ஐயாவோட வண்டியை என் அப்பன் ஓட்டி இப்ப நான் ஓட்டிக்கிட்டு இருந்தேன், அது எவ்ளோ பெரிய கௌரவம் தெரியுமா, நான் அப்படி