(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

வந்தாலே போதும் கீழவீதி ஆளுங்க எல்லாம் எனக்கு முதலாளிக்கு சமமா மரியாதை தருவாங்க ஆனா இப்ப அந்த கௌரவம் மரியாதை எல்லாம் போச்சி”

  

”அதுக்கு என்ன செய்யலாம்ங்கற அந்த வீராவை அடிச்சி உதைச்சி காலை உடைச்சிட்டா, அவனால காரை ஓட்டமுடியாது அவனை பழிவாங்கின மாதிரியும் ஆச்சி என்ன சொல்ற செய்யலாமா” என ஒருவன் ஆர்வமா கேட்க அதற்கு பழைய டிரைவரோ

  

”வீராலாம் என் கால்தூசுக்கு சமானம் அவனோட காலை உடைச்சிட்டா எனக்கென்ன கிடைக்கப் போகுது”

  

”உன் வேலை கிடைக்குமே”

  

”ஆனா நான் இழந்த கௌரவத்தை எப்படி மீட்டறது“

  

”அதுக்கு என்ன செய்யலாம்ங்கற”

  

”அவனோட காலை உடைக்கனும்”

  

”யாரை சொல்ற”

  

”ம் என்னை வேலையை விட்டு எடுத்தானே அவனை சொல்றேன்”

  

”உளறாதடா சின்னய்யாவையா சொல்ற”

  

”அவனைதான் சொல்றேன்”

  

“புத்தி கெட்டுப் போச்சா உனக்கு, சின்னய்யாவோட நிழலைகூட உன்னால தொடமுடியாது, வேணாம் இதனால உனக்குத்தான் ஆபத்து”

  

”முடியாது, என்னை அவமானப்படுத்தின சின்னய்யாவை நான் பழிவாங்காம விடமாட்டேன், ஒரு வாய்ப்பு கிடைக்கட்டும் அன்னிக்கு பாரு”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.