கொழுப்பேறிடுச்சா உனக்கு” என குமரப்பனை அடிக்க வர சட்டென கார்கோடகனை அகத்தியன் நிப்பாட்டினான்
”நிறுத்து” அதில் கார்கோடகனும் சற்று நின்று அகத்தியனை பார்க்க அகத்தியனோ
”உனக்கு அறிவில்லை இப்படியா கதவை திறந்துக்கிட்டு தடாலடியா உள்ள வருவ. என் ரூமுக்குள்ள வரும் போது வரலாமா வேணாமான்னு அனுமதி கேட்டு வரனும், அது தெரியாதா உனக்கு” என சத்தம் போட கார்கோடகனோ
”மன்னிச்சிடுங்க சின்னய்யா ஒரு சின்ன பிரச்சனை அதான் தகவல் சொல்ல வந்தேன்”
”அப்படியா சரி சேர்ல உட்காரு பேசலாம்” என சொல்ல கார்கோடகன் கெத்தாக இருக்கையில் அமர அகத்தியனோ குமரப்பனை பார்த்து
”நீங்களும் சேர்ல உட்காருங்க” என சொல்ல கார்கோடகன் அதிர்ந்தான்
”சின்னய்யா” என கத்த
”இந்த கத்தற வேலையெல்லாம் வேற எங்கயாவது வைச்சிக்க, இது என்னோட இடம், இங்க நான் சொல்றது மட்டும்தான் நடக்கும் உனக்கு பிடிக்கலைன்னா வெளிய போ” என சொல்ல கார்கோடகன் அமைதியாக இருந்தான்.
அகத்தியனோ குமரப்பனை பார்த்து இருக்கையில் அமரும்படி கையால் சைகை செய்ய குமரப்பனோ கார்கோடகனை கண்டு அச்சத்துடனே இருக்கையில் அமர கார்கோடகன் குமரப்பனை முறைக்க அதில் குமரப்பன் நடுங்க அகத்தியனோ
”வந்த விசயத்தை சொல்லு” என்றான் அதிகாரமாக அதில் கார்கோடகன்
”பேக்டரியில ஒரு பிரச்சனை? புது ஆளு ஒருத்தன் வேலையை சரியா செய்யாம தையல்மிஷின்ல கையை விட்டுட்டான்” என சொல்ல அகத்தியன் பதறினான்