”கார் சாவி கொடு” என கேட்க அவனோ தயங்கி தயங்கியே சாவியை தர அதை வாங்கிய அகத்தியன் அப்படியே அதை வீராவிடம் தந்து
”இனிமேல நீதான் என் கார் டிரைவர்” என சொல்ல வீராவிற்கு அப்படியொரு மகிழ்ச்சி, புன்னகை பூத்தபடி அகத்தியனை பார்க்க அதைக்கண்டதும் பழைய டிரைவருக்கு சொல்லவொண்ணா கோபம் என்னவோ அவனது சொத்துக்களை பறித்தது போல அகத்தியனிடம்
”சின்னய்யா என்ன இதெல்லாம் போயும் போயும் கீழவீதி ஆளுகிட்ட, நம்ம கார் சாவியை தர்றீங்களே இது அநியாயம் நான் என்ன தப்பு செய்தேன்”
”வர்றவழியில நீ பேசின பேச்சு எனக்கு சுத்தமா பிடிக்கலை, அதனால உன்னை வேலையை விட்டு எடுத்துட்டேன்”
என சொன்னதும் பழைய டிரைவரின் முகம் கருத்துவிட்டது. கோபமாக அங்கமுத்துவை பார்க்க அங்கமுத்துவோ அகத்தியனிடம்
”அகத்தியா என்ன இதெல்லாம், நம்மாளை வேலையை விட்டு எடுத்துட்டு ஏதோ பஞ்ச பரதேசியை வேலைக்கு வைக்கற இது நல்லாயில்லை”
”மாமா இது என்னோட விருப்பம், இதுல நீங்க தலையிடறதுதான் நல்லாயில்லை”
”கார்மெண்ட்ஸ் வேணா நீ உருவாக்கியிருக்கலாம் ஆனா, இந்த கார் உன் தாத்தாவோடது அவருக்கு அடுத்து உன் அப்பாவுக்கு வந்தது, இப்ப உனக்கு வந்திருக்கு, இந்த காரை யார் ஓட்டனும்? யார் ஓட்டக்கூடாதுன்னு முடிவு எடுக்கற உரிமை உனக்கில்லை, உன் தாத்தாவுக்குதான் இருக்கு உறுதியா சொல்றேன் கீழவீதி ஆளை கார் ஓட்ட வைக்கறது உன் தாத்தாவுக்கு சுத்தமா பிடிக்காது அவர் இதுக்கு ஒத்துக்க மாட்டாரு”
”ஓ அப்படியா”