நிறைய லாபம் வருதே மாமா“
”அட என்னப்பா நீ சொன்னதையே சொல்ற இப்போ பணம்லாம் ஒரு விசயமே இல்லை”
”வேற என்ன மாமா”
”கார்மெண்ட்ஸ்ல நம்ம ஆளுங்களை மட்டும் வேலைக்கு வைச்சிருக்கலாமே, எதுக்கு போயும் போயும் கீழவீதி ஆளுங்களை வேலைக்கு வைச்சிருக்க அதனால கார்மெண்ட்ஸ்க்கு கெட்டபேர் வருது” என சொல்ல அகத்தியனுக்கு கோபம் வராமல் மென்மையாக புன்னகைக்க அதைக்கண்டு கடுப்பான அங்கமுத்துவோ
”என்னப்பா சிரிக்கற”
”உங்களோட முட்டாள்தனத்தை நினைக்கறப்ப எனக்கு சிரிப்புதான் வருது மாமா”
”எது நான் முட்டாளா, அதுசரி ஊருக்குள்ள இருக்கறவங்க உன்னை தான் முட்டாள்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க”
”என்னையா எப்படி”
”பின்ன நம்மாளுங்களோட சேர்த்து அதுகளையும் வேலைக்கு சேர்த்து சே கார்மெண்ட்ஸோட புனிதமே கெட்டுப்போச்சி” என சொல்ல அகத்தியனோ
”மாமா வேலை நடக்குதா அதைப்பாருங்க, இந்த மக்களுக்குள்ள இருக்கற பிரிவினைக்கும் கார்மெண்ட்ஸ்க்கும் சம்பந்தமில்லை. நம்ம கிட்ட வேலை செய்றவங்க எல்லாருமே உழைப்பாளிங்க, திறமையானவங்க”
”இருக்கட்டுமே அதுக்குன்னு கீழவீதி ஆளுங்களை சேரக்கனுமா, நம்ம பக்கம் என்ன ஆளுங்களா இல்லை அப்படி ஆளு பத்தலைன்னா சொல்லு அக்கம் பக்கம் இருந்து நம்மாளுங்களை கூட்டிட்டு வரேன்”