”இந்த கீழவீதி பசங்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் உரைக்காது, சூடு, சுரனை இல்லாதவனுங்க, இவனுங்களால நமக்குதான் கெட்டப்பேரு” என கோபத்தில் வெடிக்க டிரைவர் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்த அங்கமுத்துவோ பின்பக்கமாக திரும்பி
”அகத்தியா இதுக்கெல்லாம் நீதான் காரணம், வெளிநாட்டுல படிச்சிட்டு வந்த உடனே நமக்குன்னு இருக்கற ஜவுளி கடையை பார்த்துக்காம பெரிசா கார்மெண்ட்ஸ் ஆரம்பிச்ச, அந்த கார்மெண்ட்ஸ் திறந்ததுல இருந்து ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பிரச்சனை தெரியுமா” என கொந்தளிக்க பின்சீட்டில் ஆடிட்டிங் ஃபைலை மும்முரமாக பார்த்தபடி இருந்த அகத்தியன் ஃபைலில் கண்ணும் சுற்றுபுறத்தில் காதையும் விட்டபடி இருந்தவன் அங்கமுத்துவிடம்
”அப்படியா நம்ம கார்மெண்ட்ஸ்ல ஓராயிரம் பிரச்சனையா இருக்காதே, அதுக்கு வாய்ப்பில்லையே மாமா நீங்க பேசறது வேடிக்கையா இருக்கு”
”அகத்தியா நீ செய்றதுதான் வேடிக்கையா இருக்கு”
”அப்படி என்ன செய்துட்டேன். நம்ம ஜவுளி கடைக்கு ஏத்தமாதிரி கார்மெண்ட்ஸ் திறந்தது தவறா மாமா”
”இல்லை அகத்தியா கார்மெண்ட்ஸ் திறந்தது தவறில்லை, சொல்லப்போனா கார்மெண்ட்ஸால நமக்கு மாசாமாசம் வருவாய் எக்கச்சக்கமா வருதே, இருந்தாலும் கார்மெண்ட்சை நீ நடத்தற விதம்தான் எனக்கு சுத்தமா பிடிக்கலை, எனக்கு மட்டும் இல்லை நம்ம ஆளுங்களுக்கு கூட பிடிக்கலை, எல்லாரும் உன் மேல கோபமாதான் இருக்காங்க”
”லட்சக்கணக்கில வருவாய் பார்க்கற கார்மெண்ட்ஸ், 100 பேரு குடும்பத்தை வாழ வைக்கற அளவு உயர்ந்திருக்கு, அப்படியிருந்தும் என்னை குறை சொன்னா எப்படி மாமா“
”அய்யோ அகத்தியா உன்னை குறை சொல்ல வரலை, உன்னோட நிர்வாகம் சரியில்லைன்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு ஓடுது”
”நிர்வாகம் சரியில்லையா என்ன மாமா சொல்றீங்க, என் நிர்வாகத்தில கார்மெண்ட்ஸ்க்கு