(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”இன்னொரு முறை என்கிட்ட குரல் உயர்த்தி பேசினீங்கன்னா மாமாங்கற உறவை இழக்க வேண்டியிருக்கும்” என கர்ஜிக்க அத்தோடு தனது கோபத்தை மனதில் புதைத்துக் கொண்டு அடங்கினார் அங்கமுத்து.

  

அகத்தியனோ பழைய டிரைவரைப் பார்த்து

  

”உன்னை வேலையை விட்டு எடுத்தாச்சி இன்னும் எதுக்காக இங்க நிக்கற கிளம்பு, இனி இந்த கேட்டுக்கு உள்ள கூட நீ வரக்கூடாது” என அதட்ட அதில் டிரைவரோ கோபத்தின் உச்சத்தில் அங்கிருந்து விறுவிறுவென நடந்து வெளியேறிச் சென்றான்.

  

அங்கமுத்துவிடம் கார் சாவியை தந்தவன்

  

”இனிமேல தாத்தாவோட கார் எனக்குத் தேவையில்லை, இந்தாங்க சாவி நீங்களே இந்தக் காரை ஓட்டுங்க” என சொல்லிவிட்டு வீராவிடம்

  

”இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்க வீரா, நாளைக்கு புதுகார் வந்துடும்”

  

”சரிங்க சின்னய்யா”

  

”போ போய் வேலையை பாரு“ என சொல்ல வீராவும் வேலையை பார்க்கச் சென்றான் அகத்தியனோ தனது மாமனை பார்த்து சிரித்துவிட்டு கார்மெண்ட்ஸ்க்குள் நுழைந்தான் அவனைக்கண்ட அனைவருமே மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம் வைத்தார்கள். அவனும் பதில் வணக்கம் சொல்லிக் கொண்டே கார்மெண்ட்ஸ் முழுவதும் வலம் வந்தான், சரியான நேரத்தில் அங்கு வேலை ஆரம்பித்திருந்தது, வேலை நடப்பதை கண்காணித்தபடியே தனக்கென ஒதுக்கப்பட்ட ஆபிஸ் அறைக்குள் வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்தான்.

  

அவன் வந்ததும் உடனே மேனேஜர் கையில் 4 பைல்களுடன் வந்து நின்றார்

  

”சின்னய்யா” என அழைக்க அகத்தியனோ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.