(Reading time: 26 - 52 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”மாமா இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை யார் வேலை செய்தா என்ன? எதுக்காக இப்படி மேலவீதி கீழவீதின்னு பிரிச்சிப் பேசறீங்க, எல்லாருமே மனுஷங்கதானே”

  

”சரியா போச்சி நீ வெளிநாட்டுல படிச்சிட்டு வந்திருக்க, அங்க இருக்கற மாதிரி இங்க இருக்காது அகத்தியா, நமக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு, அது உனக்குப் புரியலை, எல்லாரும் மனுஷங்கதான் யார் இல்லைன்னா அதுக்காக தகுதி தராதரம் பார்க்க வேணாமா, காலம் காலமா நாம கட்டிக்காப்பத்தற ஒரு விசயத்தை நீ சர்வசாதாரணமா உடைச்சி போடப் பார்க்கற அதனால வீணா ஊர் பகையை நீ வளர்த்துக்கிட்ட, அகத்தியா சொன்னாக்கேளு வெளிநாடு வேற நம்ம நாடு வேற”

  

”என்ன வேற வேற எல்லாம் ஒண்ணுதான், என் கண்ணுக்கு எல்லாரும் மனுஷங்களா தெரியறாங்க, உங்க கண்லதான் ஏதோ பிரச்சனை மாமா முதல்ல போய் டாக்டரை பாருங்க“

  

”ஏன் சொல்ல மாட்ட, ஏதோ நீ எனக்கு வரப்போற மருமகனாச்சேன்னு உனக்கு நாலு நல்லது சொன்னா கேட்க மாட்டேங்கற, என்னையே கிண்டலடிக்கற பார்த்தியா”

  

”சரி விடுங்க மாமா இதுக்கு போய் கோச்சிக்கிட்டு” என சொல்லியவன் சட்டென காரை விட்டு இறங்கி நின்றான், மேல வீதி ஆட்களும் அவனைக் கண்டு சட்டென மரியாதையுடன் வணக்கம் வைத்தார்கள், கீழவீதி ஆட்களும் கைகட்டி பவ்யமாக குனிந்து மரியாதையுடன் வணக்கம் வைத்தார்கள்.

  

 கோட் சூட்டில் ஆஜானுபாகுவாக நின்றிருந்த அகத்தியனோ

  

”இங்க என்ன கூச்சல், கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்கு வந்தோமா வேலை செய்தோமான்னு இருக்கனும் போங்க” என அதட்ட அதில் கீழவீதி ஆட்கள் பதறிக் கொண்டு கார்மெண்ட்ஸ் நோக்கி விரைய மேலவீதி ஆட்களோ பயந்து ஓடும் கீழவீதி ஆட்களைக் கண்டு இளப்பமாக சிரிக்க அதைக்கண்ட அகத்தியனோ

  

”உங்களுக்கு வேற வேலையே இல்லையா வெட்டியா பொழுது ஓட்டாம போய் பொழப்பை பாருங்க” என சத்தம் போட அவர்களும் அமைதியாகி தங்கள் வேலைகளை காணச்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.