”ஆமாம்” என்றான் எரிச்சலாக
”என்னடா உன் முகமே விகாரமா இருக்கு தூங்கலையா நீ”
”தூக்கம் ஒண்ணுதான் கேடு”
”ஓஹோ இந்த முகரைகட்டையை வைச்சிக்கிட்டு சின்ன மருமகளை பெத்தவங்க கிட்ட போய் நின்னுடாத, பார்த்த உடனே உன்னை விரட்டிடப்போறாங்க” என சொல்ல அவனோ பயந்து சட்டென பஸ்விட்டு இறங்கி எங்கோ ஓடினான்.
வீரசிங்கமோ நிதானமாக பஸ்விட்டு இறங்கி ஆட்டோ ஸ்டான்ட் பக்கம் நடந்துச் சென்று ஒரு ஆட்டோவை பிடித்து அதன் டிரைவரிடம் மஹதியின் முகவரி தந்து மூர்த்திக்காக காத்திருந்தார்.
மூர்த்தியும் பேருந்து நிலையத்தில் இருந்த கழிப்பறையை உபயோகப்படுத்தி முகம் கழுவி பவுடர் போட்டு என களையாக வந்து சேர்ந்தான்
”டேய் மூர்த்தி அடேய் இங்கடா, எங்க பராக்கு பார்க்கறான் பாரு, டேய் உதவாதவனே” என சொல்லியபின்புதான் மூர்த்திக்கு குரல் கேட்டு வீரசிங்கத்திடம் வந்து நின்றான்
”என்ன”
”வாடா ஆட்டோ பேசி வைச்சிட்டேன் இதுலயே போலாம்”
”ஒண்ணும் வேணாம் நான் வேற ஆட்டோல போய்க்கறேன்”
”போறது ஒரே இடம்தானே, அப்புறம் எதுக்கு தனித்தனியா போய்க்கிட்டு”
”உங்களோட நான் வர்றதாயில்லை“