”எந்த உறவும் இல்லாதவளை எதுக்காக இங்க தங்க வைக்கனும் அவள் செய்தது எல்லாம் மறந்துப் போச்சா, அவள் இருந்தா பிரச்சனைதான் வரும் நானே அவளை கூட்டிட்டுப் போறேன்”
”மாமா சொன்னா புரிஞ்சிக்குங்க, பிரச்சனை நீங்க நினைக்கற மாதிரியில்லை பெரிசாயிடுச்சி, மூர்த்தியையும் ஜானகியையும் சேர்த்து வைக்கறது ரொம்ப கஷ்டம், இப்ப நீங்க அவளை கூட்டிட்டுப் போனா அவ்ளோதான் மூர்த்தி ஜானகியை விட்டுடுவான், எப்படியாவது அவங்களை சேர்த்து வைக்கனும்னு நான் முடிவு பண்ணிட்டேன், அதுவரைக்கும் அவள் இங்கதான் இருப்பா” என சொல்ல அனைவருமே அதிர்ந்தார்கள். ஜானகிக்கு மட்டும் நிம்மதியாக இருந்தது
”வேங்கை என்னடா பேசற ஒண்ணும் தேவையில்லை, உன் அப்பா இல்லாத நேரம் பார்த்து நீ இப்படி நடந்துக்கறது தப்பு, அவர் திரும்பி வந்து பார்த்தா சத்தம் போடுவாரு” என மங்களம் சொல்ல அதற்கு வேங்கையனோ
”அவர் என்ன சொன்னாலும் தட்டாம நான் செய்திருக்கேன் ஒருமுறை எனக்காக அவர் பொறுத்து போகட்டுமே என்ன தப்பு“
”என்னடா புதுசா எதிர்த்து பேசற”
”என்ன செய்றது யாராவது ஒருத்தரோட வாழ்க்கையாவது சீராகனும்ல”
”அதுக்குன்னு நீ ஜானகிக்கு உதவப் போறியா அதுக்குப்பதிலா சின்ன மருமகளை பார்க்கலாம்ல”
”அவளை ஏன் நான் பார்க்கனும், சொல்லப்போனா அவள் இங்க இருக்கவே கூடாது முதல்ல இவளை வெளிய அனுப்புங்க“
”அவளை ஏன்டா வெளிய அனுப்பனும், அவள் இந்த வீட்டு மருமகள் இங்கதான் இருப்பாள்”