(Reading time: 24 - 47 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”ஒண்ணும் தேவையில்லை இங்க முறையில்லாம இருக்கறது இவள்தான் இவளால எனக்கு மானம் போகுது”

  

”ஓ ஜானகியால உன் மானம் போச்சே அதை மறந்துட்டியா”

  

”அடிச்சாலும் பிடிச்சாலும் நாம சொந்தக்காரங்க, ஆனா இவள் யாரோதானே எதுக்கு இங்க இருக்கனும்” என மஹதியைப் பார்த்து சொல்ல மஹதியின் கண்கள் கலங்கியது.

  

”அவள் எங்கயும் போகமாட்டா” என்றார் மங்களம் உடனே வேங்கையன்

  

”அப்ப ஜானகியும் எங்கயும் போகமாட்டா” என சொல்ல மஹதி புரிந்துக் கொண்டு மங்களத்திடம்

  

”அத்தை விடுங்க அவர் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரிஞ்சிடுச்சி, நானேதானே இங்க வந்தேன் நானே கிளம்பறேன் அத்தை” என சொல்ல மங்களம் துடித்தார்

  

”நீ ஏன் போகனும் வேணாம்” என சொல்ல அவள் கேட்கவில்லை அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியேற அவளுக்காக மங்களம் குபேரன் வேணி ஆகிய மூவரும் கவலையுடன் சென்றார்கள். வேங்கையனும் ஜானகியும் வேடிக்கைப் பார்த்தார்கள்.

  

வீட்டை விட்டு வெளியேறிய மஹதி சட்டென நின்றாள், எதிரே மகேந்திரன் இருந்தார்.  அவரைக்கண்டதும் மஹதி அதிர்ச்சியில்

  

”அப்பா” என ஈனமாக அழைக்க அவரோ பட்டென ஒரு அறைவிட்டார் அவளின் கன்னத்தில், அதில் நிலைதடுமாறி விழப்போனவளை தாங்க மற்றவர்கள் வரும் முன் வேங்கையன் வந்து பிடித்துக் கொள்ள அதைக்கண்ட அனைவருக்குமே அதிர்ச்சியும் ஆச்சர்யமும் வந்தது.

  

மஹதியை சரியாக நிற்க வைத்தான் வேங்கையன், அதற்குள் வீரசிங்கம் மூர்த்தி சாந்தி என அனைவரும் வந்து சேர்ந்தார்கள், தாயைக்கண்டதும் மஹதி சாந்தியிடம் செல்ல, ஜானகி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.