”ஏன் வந்தா உன்னோட திட்டம் எல்லாம் பாழாயிடுமா என்ன“
”அதெல்லாம் இல்லையே” என தயங்கி தயங்கி பேச
”இதப்பாருடா சின்ன மருமகள் வீடு ரொம்ப தூரம் போல, 200 ரூபாய் ஆகுமாம் நான் 100 ரூபாய் தரேன் நீ 100 ரூபாய் தா, ரெண்டு பேரும் இதுலயே போய் சேருவோம் வந்து சேரு” என சொல்ல அவனோ யோசித்தான்
”ஓ 200 ரூபாயா அப்ப நாம தனியா போனா முழுபணத்தையும் தரனுமே, இவர்கூடவே போயிடலாம் பாதி பணம் தந்தா போதும்” என நினைத்தவன் உடனே ஆட்டோவில் ஏறி ஐம்மென மாப்பிள்ளை போல அமர்ந்துக் கொள்ள வீரசிங்கமோ அவனின் செயலை நினைத்து சிரித்தபடியே ஆட்டோவில் ஏறி அமர ஆட்டோவும் கிளம்பியது.
ஆனாலும் மூர்த்தியின் சந்தேகம் தீரவில்லை, மஹதி வீட்டுக்குதான் ஆட்டோ செல்கிறதா அல்லது வேறு எங்காவது கொண்டு போய் தன்னை விடப்போறாரா என நினைத்து சட்டென ஆட்டோ டிரைவரின் காதை கடித்தான், அவரிடம் செல்லும் இடத்தைப் பற்றி கேட்க அவரும் மஹதியின் முகவரி சொல்ல அதில் மூர்த்திக்கு நிம்மதியானது.
சிரித்த முகத்துடன் வீரசிங்கத்தைப் பார்க்க அவரோ தலையில் அடித்துக் கொண்டு
”உன்னை ஒண்ணும் எங்கயாச்சும் கொண்டு போய் தள்ளிட மாட்டேன் பயந்து சாகாத” என சொல்ல
”அதெல்லாம் இல்லை டிரைவர்க்கு அட்ரஸ் சரியா சொன்னீங்களா இல்லையான்னு தெரிஞ்சிக்கதான் கேட்டேன்”
”உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா”
”ஆமா மஹதியோட அப்பா அம்மாகிட்ட என்ன பேசப் போறீங்க”