(Reading time: 24 - 47 minutes)
Chinna marumagal
Chinna marumagal

காரைக்குடிக்கு செல்ல காரில் இந்த நால்வரும் பயணப்பட்டார்கள், பயணத்தின் போது கூட யாரும் யாரிடமும் பேசவில்லை, அவரவர்கள் மனதில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் மட்டும் சத்தமில்லாமல் பேசிக் கொண்டது.

  

காரைக்குடி

  

ஜானகி வீடு வந்ததில் இருந்து மஹதிக்கு அங்கு இருக்கவே இருப்புக் கொள்ள இயலவில்லை, தவித்துப் போனாள் அவளை மங்களமே சமாதானம் செய்தார், வேங்கையனோ வீட்டிற்கு காவலாக வெளியே படுத்திருந்தான்.

  

மறுநாள் பொழுது விடிந்ததும் வேங்கையன் எழுந்து வீட்டிற்குள் வர அங்கு சோகமே உருவாக மஹதியிருப்பதைக்கண்டு இரக்கமின்றி

  

”அம்மா அம்மா” என அழைத்தான் மங்களமோ மகன் மீது இருந்த கோபத்தில் எட்டிக் கூட பார்க்கவில்லை, என்ன என கேட்கவும் இல்லை, தாயின் கோபத்தை புரிந்துக் கொண்டவன் மஹதியைப் பார்க்க அவள் உடனே ஆர்வமாக அவனிடம் வந்து நின்றாள்

  

”சொல்லுங்க என்ன வேணும் டீதானே போட்டுக் கொண்டு வரவா” என கேட்க அவனோ பெருமூச்சுவிட்டு அவளை ஏற இறங்கப்பார்த்துவிட்டு வீட்டையும் சுற்றி முற்றி பார்த்து

  

”ஜானகி ஜானகி” என குரல்கொடுத்தானே பார்க்கலாம், அதில் மஹதியின் முகம் சூம்பிவிட்டது, சட்டென அவனை விட்டு விலகி ஒரு இடமாக சென்று அமர்ந்துவிட்டாள்.

  

வேங்கையனின் குரல் கேட்டதும் ஜானகி அதிசயமாக உடனே வந்து நின்றாள், அதைக்கண்டு வேங்கையனுக்கே ஆச்சர்யமாக இருந்தது

  

”டீ கொண்டா” என்றான் அவளும் அதைக்கேட்டு மறுபேச்சில்லாமல் டீ போடச் சென்றாள். அதைக்கண்டு இன்னும் மனம் உடைந்தாள் மஹதி.

  

வேங்கையனோ குளிக்கச் செல்ல ஜானகி டீ போட வந்ததைக்கண்ட மங்களம்

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.