(Reading time: 24 - 47 minutes)
Chinna marumagal
Chinna marumagal

”இந்தாங்க டீ” என்றாள் அவனோ அவளை வியப்புடன் பார்த்துவிட்டு ஜானகியிடம்

  

”உன்கிட்டதானே டீ கேட்டேன்”

  

”நான் என்ன செய்றது, டீ போட போனா உங்கம்மா திட்டி விரட்டிட்டாங்க நான் இங்க வேண்டாதவளாம், இதோ நிக்கறாளே இவள்தான் இந்த வீட்டு சின்ன மருமகளாம்” என சொல்ல வேங்கையன் நொந்துப் போய் மஹதியிடம் இருந்து டீயை வாங்கிக் கொள்ள மஹதி மகிழ்ந்தாள், ஜானகி அதிர்ந்தாள்

  

”என்ன நீங்க அவள் தர்ற டீயை வாங்கறீங்க” என கேட்க வேங்கையனோ

  

”இது எங்கம்மா போட்ட டீ, கொண்டு வந்து தந்தவ வேலைக்காரிதானே, அப்புறம் என்ன” என சொல்ல ஜானகியின் முகம் பிரகாசமானது, மஹதியின் முகம் கருத்துவிட்டது அவனது பேச்சைக் கேட்டபடி வந்த மங்களமோ

  

”வேங்கை”

  

”சொல்மா”

  

”ஜானகி எப்ப இங்கிருந்து போகப் போற”

  

”மூர்த்தி வீடு மூடியிருக்கு, அவங்க யாரும் இல்லை வெளியூர் போயிருக்காங்களாம், அவங்க வரட்டும் வந்தபின்னாடி இவளை கொண்டு போய் விடறேன்“

  

”அதுவரைக்கும் இவள் இங்கதான் இருக்கனுமா”

  

”ஆமாம்”

  

”எனக்கு இவள் இங்க இருக்கறது பிடிக்கலை”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.