”இல்லை நான் வரலை”
“வராம இங்க இருந்து என்ன செய்யப் போற”
”மூர்த்தி மாமா வர்றவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்”
“சரி மூர்த்தி வரட்டும் அதுவரைக்கும் நம்ம வீட்ல இரு அவன் வந்ததும் தாராளமா நீ போ யாரும் தடுக்க மாட்டாங்க“
”இல்லை என்னையும் மூர்த்தியையும் சேர்த்து வைக்க வேங்கையனால மட்டும்தான் முடியும் உங்க கூட வந்தா நீங்க எனக்கு உதவ மாட்டீங்க“
”கொழுப்புடி உனக்கு, வேங்கையனை என்ன நினைச்சிக்கிட்டு இருக்க, ஏதோ உன் மேல இருக்கற பாசத்தால உனக்கு உதவி செய்ய வந்தான், அதை பயன்படுத்திக்கிட்டு அவனை கஷ்டப்படுத்தப் பார்க்கறியே போதும், இப்ப என்ன உன்னையும் மூர்த்தியையும் சேர்த்து வைக்கனும் அதானே சரி, நாங்களே சேர்த்து வைக்கறோம் கிளம்பு”
”உங்களை எப்படி நம்பறது”
”அடிச்சேன்னு வை அவ்ளோதான் சுருண்டுக்குவ, இதுவரைக்கும் உன்னை நான் அடிச்சதில்லை இப்படியே நீ பேசிக்கிட்டு இருந்த நாக்குல சூடு வைச்சிடுவேன், உன்னை நம்பி நாங்க ரொம்பவே ஏமாந்துப் போனோம், நாங்களே அமைதியா இருக்கறப்ப நீ எங்களை நம்ப மாட்டியா வா” என இழுக்க ஜானகியும் அவர்களுடன் வர சரியாக அந்நேரம் வேங்கை வந்து நிப்பாட்டினான்
”ஜானகியை எங்க கூட்டிட்டு போறீங்க மாமா” என குபேரனிடம் கேட்டான் வேங்கையன்
”எங்க வீட்டுக்கு”
”வேணாம் அவள் இங்கயே இருக்கட்டும்“