மூர்த்தி கடகடவென ஜுஸ் குடித்துவிட்டு அவர்களைப் பார்த்து பேசினான்
”உங்க பொண்ணு மஹதி தன்னோட தோழியைப் பார்க்க காரைக்குடி போனாங்கள்ல” என ஆரம்பிக்க அவர்களும்
”ஆமாம் ஆமா நீங்க யார்ன்னு சொல்லலையே”
”சொல்றேன் சொல்றேன் அதுக்குதானே வந்திருக்கேன்” என ஆரம்பித்தவன் மஹதியை பற்றி அவனுக்கு தெரிந்தது, ஊரில் நடந்தது என ஒன்றுவிடாமல் அனைத்தையும் சொல்ல சொல்ல அவர்களுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.
பயத்துடனும் பதட்டத்துடனும் மூர்த்தி சொல்வதைக் கேட்கலானார்கள், வீரசிங்கம் ஏதும் பேசவில்லை மூர்த்தியே உளறட்டும் நாம் கடைசியில் பேசிக் கொள்வோம் என நினைத்து அமைதி காத்தார். இதோ அதோ என ஒன்றரை மணி நேரத்தில் மூர்த்தி பேசி முடித்து ஓய்ந்து மூச்சு வாங்கினான். அவனால் இனி பேச இயலாது என நினைத்த வீரசிங்கம் இப்போது வாய் திறந்தார்
”இதப்பாருங்க இவன் சொன்னது எல்லாமே உண்மைதான் ஆனா உங்களுக்கு தெரியாத ஒரு உண்மையிருக்கு, அது என்னன்னா உங்க பொண்ணு எங்க பையனை விரும்பறா, அவனைத்தான் கட்டிக்குவேன்னு என் வீட்ல வந்து தங்கியிருக்கா, பெத்த அப்பனா நான் அவளோட காதலை ஏத்துக்கிட்டேன், அப்படியே இந்த விசயத்தை உங்ககிட்ட சொல்லிட்டு உங்க சம்மதத்தை கேட்டுப் போகலாம்னு வந்தேன், நீங்க சம்மதிக்கனும்னு உங்க பொண்ணு ஆசைப்படலை, நீங்க முடியாதுன்னு சொன்னாலும் கட்டாயம் உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளாதான் இருப்பா, அந்தளவுக்கு அவளுக்கு எங்க குடும்பத்தை பிடிச்சிருக்கு, முக்கியமா என் பையன் வேங்கையனை பிடிச்சிருக்கு
வேங்கையனை பத்தி மூர்த்தியே எல்லாம் சொல்லிட்டதால நான் எதையும் சொல்லிக்கலை, பொய் சொல்லி உங்களை ஏமாத்தி பொண்ணை அபகரிக்கற எண்ணம் எனக்கு இல்லை, உங்க பொண்ணு ஜானகிக்காக உதவி செய்ய வந்தா கடைசியில அவளே காதல் வசப்பட்டுட்டா, ஜானகியும் என் மகனை விட்டுட்டு இதோ இருக்கானே மூர்த்தி இவன் வீட்ல தங்கிட்டா