கிடைக்கும்” என கேட்க அவள் நொந்துப் போனாள்.
”அதானே ஆதாயம் இல்லாம நீ வரமாட்டியே”
”என்ன செய்றது கண்ணகி சுயநலமாவே வாழ்ந்து பழகிட்டேன், பலன் இல்லாம காரியம் செய்து பழக்கமில்லை எனக்கு”
”என்ன வேணும் உனக்கு”
”பிரின்சிபால் பதவி வேணும்”
”உளறாத”
”விசயம் பெரிசு கோவலன் எங்க இருக்கான்ங்கறது மட்டுமில்லை அவன் என்ன செய்றான், அவனோட ரகசியம் எல்லாமே எனக்குத் தெரியும், அந்த விசயத்தை நான் வெளிய சொன்னா மொத்த குடும்ப மானமும் போயிடும், அப்புறம் கல்லூரியில உனக்கு மதிப்பு இருக்காது” என சொல்ல அவளோ யோசிக்க உதயமூர்த்தியோ அவளிடம்
”அம்மாடி கண்ணகி இவன் பேச்சை நம்பாத, இவன் சூழ்ச்சி செய்யறான்”
”இருக்கட்டும் சார் ஆனா இப்ப தாத்தாவோட உயிர் முக்கியமாச்சே”
”அதுக்காக இவனுக்கு பணிஞ்சிப் போகனுமா“
”வேற வழியில்லை ஒரு உயிரை காப்பாத்த எதை வேணும்னாலும் செய்யலாம், என்னால முடிஞ்சா நான் என் உயிரை கூட தரத்தயாரா இருக்கேன், ஒரு பிரின்சிபால் பதவிதானே போகட்டும் அவனே பார்த்துக்கட்டும்“
”தப்பும்மா தப்பு இவன் விஷப்பாம்பு, இவனை உள்ள விட்டா எல்லாரையும் கொத்தி கொன்னுடுவான்”