(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”என்னை மன்னிச்சிடும்மா, நீயும் தனியா அநாதரவா இருக்க நான் இறந்தபின்னாடி கோவலனும் தனியாளாயிடுவேன் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைச்சிட்டா ஒருத்தரை ஒருத்தர் நல்லபடியா பார்த்துப்பீங்கன்னு கணக்கு போட்டேன்”

  

“உங்க கணக்கு தப்பாயிடுச்சி தாத்தா, விதியோட கணக்கு பார்த்தீங்களா என்னதான் நீங்க என்னையும் அவரையும் சேர்த்து வைக்க நினைச்சாலும் முடியலையே”

  

என சொல்லி வருந்த அதைக்கண்டு அவரும் வருந்தினார்.

  

சிலம்புவோ மறுநாளும் மாதவி வீட்டை கண்காணித்தான், அவளது வீட்டின் முன் கோவலன் வண்டி நின்றபடி இருந்தது, அது அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது

  

”ஓகே இவன் இங்கதான் இருக்கானா, இருக்கட்டும் இருக்கட்டும் எத்தனை நாள் இருக்கான்னு நானும் பார்க்கிறேன்” என நினைத்தான், அவனுக்கு முழுவேலையே இந்த வீட்டை கண்காணிப்பதாக மாறிப் போனது.

  

நடந்ததை அறிந்த உதயமூர்த்தியும் ஈஸ்வரமூர்த்திக்கு ஆறுதல் சொல்ல முயன்றார், இயலவில்லை, கண்ணகியும் தனிமையில் வாட கல்லூரியின் நிலைமையை கருத்தில் கொண்டு மறுபடியும் உதயமூர்த்தியே கல்லூரிக்கு பிரன்சிபாலானார்.

  

அந்த செய்தியும் சிலம்புவின் காதில் விழுந்தது

  

”பிரச்சனை ரொம்ப பெரிசாயிடுச்சி போல இருக்கு, அந்த கல்லூரிக்காக பாடுபட்ட கண்ணகி இப்படி அம்போன்னு அதை விட்டுட்டாளே, உதயமூர்த்தியால அந்த கல்லூரியை வழிநடத்த முடியாது, கண்டிப்பா அது பழைய நிலைமைக்கு மாறிடும், கம்பெனியும் முதலாளியில்லாம நடக்குது, எப்படியும் அதுவும் நஷ்டத்துக்கு வந்துடும், ஆக எல்லாம் இழக்கப்போறாங்க, ஐஐ சூப்பர் எனக்கு நடந்த அவமானத்துக்கு அவங்களுக்கு இது தேவைதான், இப்ப மட்டும் கண்ணகியை பார்க்க முடிஞ்சா நல்லாயிருக்குமே, அவள் கண்ணீரோட இருக்கறதை பார்க்கனும்னு ஆசையாயிருக்கு, வாய்ப்பு கிடைக்கட்டும் அவளை போய் பார்க்கிறேன்” என

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.