(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”ஓஹோ உனக்கு இப்படியொரு பிரச்சனையிருக்குல்ல ஆனா, நான்தான் அவனை மிரட்டி விரட்டிட்டேனே“

  

”இருந்தாலும் அவனுங்கலாம் அடங்கற ஆளுங்க கிடையாதுங்கய்யா, ஒரு விசயத்தை நினைச்சிட்டா அதை செய்து காட்டுவானுங்க மோசமானவனுங்க”

  

”சரி சரி பயப்படாத நீ வேணா உன் வீட்டுக்குப் போ, நான் கார் ஓட்டிக்கிட்டு என் வீட்டுக்குப் போறேன்“

  

”பரவாயில்லங்கய்யா நானே உங்களை வீட்ல விட்டுடறேன்”

  

”வேணாம் நீ வேற ரொம்ப பதட்டமா இருக்க, ராத்திரி நேரம் வேற நீ பாட்டுக்கு பதட்டத்தில வண்டியை ஓட்டி ஏதாவது ஆபத்து நடக்கறதுக்கா வேணாம் நீ கிளம்பு, நான் என்னை பார்த்துக்கறேன்”

  

”ரொம்ப நன்றிங்கய்யா நான் நாளைக்கு காலையில சீக்கிரமா வந்துடறேன்ங்க”

  

”சரி” என சொல்ல வீரா எடுத்தான் ஒரு ஓட்டம் தலைதெறிக்க ஓடினான் அவனது வீடு நோக்கி, அவனின் பயத்தைக்கண்டு அகத்தியனுக்கே சங்கடமாக இருந்தது, அய்யோ பாவம் என இரக்கப்பட்டபடியே காருக்குள் ஏறி காரை ஓட்டலானான்.

  

காரும் சென்றுக் கொண்டிருந்தது, சரியாக மேலவீதியும் கீழவீதியும் சந்திக்கும் ஒரு திருப்பத்தில் காரை திருப்பினான் அகத்தியன், சட்டென எங்கிருந்தோ வந்த ஒரு பெரிய செங்கல் அவனது காரில் முன் பக்க ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே விழ அந்த அதிர்வில் அகத்தியன் சட்டென வண்டியை நிறுத்திவிட்டு என்னவென பார்த்தான்.

  

அதற்குள் சரமாரியாக கற்கள் வந்து அவனது வண்டியை பதம்பார்த்தது, அகத்தியன் காருக்குள் மறைந்தபடி இருந்தான் கற்கள் விழுவது நின்றதும் நிமிர்ந்து பார்த்தான், அவனது காரின் முன் பழைய டிரைவரும் அவனது கூட்டாளிகளும் இருக்கவே அவனுக்கு புரிந்துவிட்டது. காரை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.