(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

விட்டு இறங்கி நின்று

  

”நீ செய்றது தப்பு, ஒழுங்கா இங்கிருந்து போயிடு இல்லைன்னா உன்மேல போலீஸ் கேஸ் போட வேண்டியிருக்கும்” என சொல்ல அவனோ கேவலமாகச் சிரித்து

  

”அதுக்கு நீ உயிரோட இருந்தாதானே” என சொல்லியபடியே அகத்தியனை தாக்க வந்தான். அகத்தியனும் அவனிடம் சண்டையிட்டான், அவனது கூட்டாளிகளும் அகத்தியனை சுற்றி வளைத்து களத்தில் இறங்க இப்போது அகத்தியனுக்கு பதட்டம் ஏற்பட்டது, என்னதான் சண்டை கலை தெரிந்திருந்தாலும் வந்தவர்கள் சண்டைக்கு வந்திருந்தால் ஒரு கை பார்த்திருப்பான், வந்தவர்கள் கொலைவெறியுடன் வந்தபடியால் எந்த பக்கம் இருந்து தனக்கு அறிவாள் வெட்டு விழும் என்ற அச்சத்துடனே சண்டையில் இறங்கினான், ஆயினும் சில இடங்களில் அறிவாள் வெட்டு அவன் மேல் விழ அவன் சற்று பின்னடைய பழைய டிரைவர் அவனை நன்றாக அடித்துப் போட அதில் அகத்தியன் அவனை தள்ளிவிட்டு மேலவீதி நோக்கி ஓடலானான்.

  

பின்னாலே மற்றவர்களும் ஓடிவந்தார்கள், அகத்தியனோ இருளை பயன்படுத்திக்கொண்டு சட்டென ஒரு சின்ன சந்திற்குள் நுழைய மற்றவர்கள் வேறு பக்கம் செல்லவும் நிம்மதியாகி காயங்களுடன் தனது காரிடம் வந்த நேரம் அதற்குள் அவனது மாமா அங்கமுத்து அனுப்பிய ஆட்கள் அந்த காரை ஆராய்ந்து அந்த கணக்குவழக்கு ஃபைலை எடுத்துக் கொள்ள அதைக் கண்ட அகத்தியன் சத்தம் போட அதில் அவர்கள் அந்த ஃபைலுடன் ஓடினார்கள். அவர்களை விரட்டி பிடிக்கும் அளவு அவனிடம் போதிய ஆற்றல் இல்லாமையால் தடுமாறினான், அதற்குள் பழைய டிரைவரும் அவனது கூட்டாளிகளும் காரிடம் வருவதைக்கண்டு சட்டென கீழவீதி நோக்கி ஓடினான். அவர்களும் அவனை விடாமல் விரட்ட ஒரு கட்டத்தில் அவர்களுக்கு போக்கு காட்டிவிட்டு சட்டென கண்ணில் படும் வீட்டிற்குள் நுழைந்தான் அந்நேரம் அந்த வீட்டு கதவு திறந்திருந்தது, அது அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது அவன் வந்த நேரம் அந்த சத்தம் கேட்டு உள்ளிருந்து ஒரு பெண்குரல் கேட்டது

  

”யாரது” அந்த குரலைக் கேட்டதும் அகத்தியன் முகம் தெளிந்தான்

  

”நாச்சியா” என அழைக்க அடுத்த நொடி நாச்சியா அவன் முன் வந்து நின்றாள்.

  

”சார் நீங்களா நீங்க எப்படி உள்ள வந்தீங்க”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.