வாழறவளை போய் வெறுக்கறியே அறிவில்லை உனக்கு”
”நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எனக்கு இவள் தேவையில்லை”
”ஏன் தேவையில்லை என்ன பிரச்சனை உனக்கு”
”என்னவா எனக்கு இவளை பிடிக்கலை”
”அதான் என்ன காரணம்னு கேட்கறேன்”
”அவள் உன் பொண்டாட்டி”
”அதான் தாலியை கழட்டியாச்சே அப்புறம் என்ன அவளை நீ கல்யாணம் செய்துக்க”
”முடியாது இவளை கல்யாணம் செய்து என்ன செய்றது”
”என்னடா உளர்ற”
”ஆமா இவள் கையாட்டிக்கிட்டு வந்தா நான் இவளை ஏத்துக்கனுமா”
”ஓ இதான் உன் பிரச்சனையா சரி அவளுக்குதான் சொத்திருக்கே அப்புறம் என்ன”
”அதை குபேரன் மாமா எனக்கு தரமாட்டாரு இவளால எனக்கு நஷ்டம்தான், அதே மஹதியை பிடிச்சா சொத்து கிடைக்கும்னு பார்த்தா அதுவும் இப்ப இல்லைன்னு ஆயிடுச்சி, எல்லாம் இவளால வந்தது, உன்கூடவே இவள் இருந்திருந்தா எனக்கு மஹதி கிடைச்சிருப்பா”
”ஓஹோ உனக்கு சொத்துதான் வேணுமா சரிடா இப்ப என்ன சொத்துதானே தரேன், என் பங்கு சொத்து இருக்கு அதை அப்படியே உன் பேர்ல எழுதி வைக்கிறேன், ஜானகியை ஏத்துக்கறியா” என கேட்க அவனோ யோசித்தான்
”என்னடா யோசிக்கற நான் வேங்கையன் சொன்ன சொல்லை காப்பாத்துவேன், வேணும்னா