யோசித்தாள்.
டாக்டர் பிரசாத் இது மாதிரி கிரிமினல் காரியங்களில் ஈடுப்படுவார் என்பதை நம்ப அவளுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அது இப்போது முக்கியமில்லை. இந்த கிறுக்குப் பிடித்தவனிடம் இருந்து தப்பிக்க வேண்டும். அது தான் முக்கியம்.
“டாக்டர், நாங்க மூணுப் பேரும் உங்களை பத்தி யார் கிட்டேயும் வாயே திறக்க மாட்டோம். எங்களை விட்ருங்க,” என்றாள் சத்யா!
“இல்லை சத்யா, அந்த ரிஸ்க் என்னால எடுக்க முடியாது. மூணு பேரும் சாகப் போறீங்க, வேற வழியே இல்லை!"
"அப்படி எங்களை சாகடிச்சாலும் நீங்க தப்ப முடியாது டாகடர்! நாங்க இங்கே வந்திருக்குறது என் வீட்டுக்காரருக்கு தெரியும். சக்திக்கு தெரியும். அபினவ்க்கும் தெரியும்!"
சத்யா மிரட்டுவதுப் போல சொன்னதைக் கேட்டு பிரசாத் அசிரத்தையாக உதட்டை சுளித்தான்!
"நீ சொல்றவங்க உங்களை தேடி வரும் போது என்ன நடந்துச்சுன்னு உண்மையை சொல்ல நீங்க யாரும் இருக்க மாட்டீங்களே சத்யா! அஹல்யா உன்னையும் சவீதாவையும் குத்தி கொலை செய்துட்டு அவளும் தற்கொலை செய்துக்கிட்டான்னு எல்லோரும் நினைக்குற மாதிரி நான் செட் அப் செய்து வச்சிருவேன்! நீ கவலையே பட வேண்டாம்!”
சத்யா வேறு என்ன செய்வது என்று உடனே எந்த ஐடியாவும் தோன்றவில்லை! எனவே தொடர்ந்து பேச்சுக் கொடுக்க முனைந்தாள்!
“எதுக்கு டாக்டர் நீங்க போய் இதெல்லாம் செய்றீங்க?”
“நான் என்ன டிவி வில்லனா? உங்க கிட்ட கதை எல்லாம் சொல்ல? இதுக்கு மேல பேசாதே. வாயை மூடு, அப்புறம் ஜான்சி ராணி சவீதா மாதிரி நீயும் வலியோட சாக வேண்டி இருக்கும்!”
சத்யா சவீதாவைப் பார்த்தாள். அவள் கையை பிடித்துக் கொண்டு முனகிக் கொண்டிருந்தாள்.