”என்னோட அறையில இருக்கா”
”அவளை ஏன் அங்க வைச்சிருக்க”
“எல்லாம் ஒரு காரணமாதான்”
”நான் அவள்கிட்ட போறேன்”
”நீங்க போக கூடாது”
”ஏன்”
“இங்க என்ன நடக்குது இந்த சமயத்தில நீங்க மாதவியோட இருக்கற விசயம் தெரிஞ்சா மானம் போகும்”
“போனா போகட்டும் எனக்கு அதைப்பத்தி கவலையில்லை நான் மாதவிகூட இருக்கதான் விரும்பறேன்“
”உங்க விருப்பத்துக்கு நான் குறுக்கே வரலை இப்ப வேணாம்னு சொல்றேன் தாத்தாவுக்கு செய்ய வேண்டிய காரியங்களை நீங்க செய்து முடிங்க அப்புறம் மாதவிகிட்ட போகலாம்”
”உன்னை எப்படி நான் நம்பறது, உன் வாழ்க்கைக்கு குறுக்க இருக்கற மாதவியை நீ ஏதாவது செய்துட்டா” என சொல்ல கண்ணகி இளப்பமாக சிரித்து
”உங்களுக்கு அவள் காதலியாகறதுக்கு முன்னாடி அவள் என்னோட உயிர்தோழி, நட்பு பெரிசா கணவன் பெரிசான்னா வந்தா நான் நட்புக்குதான் முக்கியத்துவம் தருவேன், என் தோழியை பார்த்துக்க எனக்கு தெரியும், நீங்க வந்தவங்களை போய் பாருங்க பெரிய பெரிய ஆளுங்க வராங்க, போங்க அவங்க உங்களைதான் தேடுவாங்க” என சொல்ல கோவலனும் அவளின் பேச்சை கேட்டு நடந்தான்.