2 நாட்கள் ஈஸ்வரமூர்த்திக்கான காரியங்கள் சிறப்பாக நடந்து முடிந்தது, ஒரே பேரன் என்பதால் கோவலனே கொள்ளி வைத்தான், மொட்டையடித்திருந்தான். அனைத்தும் முடித்து துக்கத்துடன் வீடு திரும்பினான், அவனுக்காக கண்ணகியும் மாதவியும் காத்திருந்தார்கள், கண்ணகி காத்திருந்தது கோவலனிடம் சில விசயங்கள் பேச, மாதவி காத்திருந்தது அவனை கண்ணகியுடன் சேர்த்து வைக்க. ஆனால் கோவலனோ துக்கத்துடன் வந்தவன் கண்ணகியிருந்தும் நேராக மாதவியிடமே தஞ்சமடைந்தான்
அவளை கட்டியணைத்து ஆறுதல் தேடினான், அவளோ திக்குமுக்காடிப் போனாள். அந்த காட்சியைக்காணும் போது தோழியாக மாதவியின் அல்லல் புரிந்துக் கொண்டாள், ஆனால் ஒரு மனைவியாக கண்ணகியின் கண்கள் கலங்கி கண்ணீர் பெருக்கெடுத்தது.
கோவலனோ மாதவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு அவனது அறைக்குச் சென்றான். பின்னாடியே கண்ணகியும் சென்றாள்.
கண்ணகி வருவதைக்கண்டும் கோவலன் சட்டென அவளை நிப்பாட்டி கதவை தாள்பாள் போட்டுவிட கண்ணகி நொந்துப் போனாள், மாதவி அதிர்ந்தாள், கண்ணகி அமைதியாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள், மாதவியோ கோவலனிடம் சண்டை போட்டாள் ஆனால் கோவலனோ தாத்தாவின் இழப்பை நினைத்து புலம்ப மாதவியோ ஒரு கட்டத்தில் அமைதியாகி அவனை ஆறுதல்படுத்தலானாள்.
மறுநாள் காலையில் உதயமூர்த்தி வந்தார் கண்ணகியைக்கண்டு
”என்னம்மா எப்படியிருக்க“
”ஏதோ இருக்கேன் சார்”
”கோவலன் எங்க”
”மாதவியோட”