எழுதி வைச்சிருக்காரு, அவர் இறந்தபின்னாடி வக்கீல் இதை கொண்டு வந்து என்கிட்ட கொடுத்தாரு பாருங்க” என சொல்ல அவரும் பார்த்தார். திகைத்தார் அதிர்ந்தார்
”என்னம்மா எல்லா சொத்தையும் உன் பேருக்கு எழுதியிருக்காரு”
”அதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு ஏன் இப்படி செய்யனும்”
“உன் அப்பா அம்மாவோட இறப்புக்கு காரணமா இருந்த கோவலனை உனக்கு கல்யாணம் செய்து வைச்சி பரிகாரம் தேடிக்கிட்டதா என்கிட்ட சொன்னான்மா, அதோட நிப்பாட்டுவான்னு பார்த்தா எல்லா சொத்தையும் உன் பேருக்கு எழுதியிருக்கானே, இதுல கோவலனுக்கு எதுவும் இல்லையே”
”ஆமாம்”
”இதுக்கு என்னம்மா அர்த்தம்“
”கோவலன் செஞ்ச தப்புக்கு பிராயசித்தமா கல்யாணம் நடத்தி வைச்சாரு ஆனா கோவலன் எனக்கு செய்த துரோகத்துக்கு பிராயசித்தமா இந்த சொத்தை என் பேருக்கு எழுதி வைச்சிருக்காரு”
”இப்ப நீ என்ன செய்யப் போற”
”நீங்க சொல்லுங்க நான் என்ன செய்யட்டும்”
”இதுல சொல்ல என்ன இருக்கு உனக்குதான் உரிமை அதிகம், மாதவியை விரட்டிட்டு கோவலனோட வாழற வழியைப் பாரு”
“கட்டாயப்படுத்தி ஒருத்தரை கல்யாணம் செய்ய வைச்சிடலாம் ஆனா கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது சார்”