சங்கமேஸ்வரனால் பேசவே இயலவில்லை, நாச்சியாவின் நிலைமை எப்படியோ அதைவிட மோசமாக இருந்தது அவரது நிலைமை, அதை அறியாத ஆண்கள் அவள் மீது அவப்பெயரை திணித்தபடி இருந்தார்கள், இதற்கு ஊரே ஒத்து ஊதியது. இறுதியில்
”இவளை போல மத்த பொண்ணுங்களும் இந்த தப்பை செய்திடக்கூடாது, அதுக்கேத்த மாதிரி தண்டனை தந்தாதான் ஊர் பொண்ணுங்களுக்கு பயம் வரும், அதுக்கு ஒரே வழிதான் இருக்கு பேசாம நாச்சியாவை ஊருக்கு நேர்ந்து விட்டுடலாம்” என சொல்ல அதைக்கேட்டு கீழவீதி மக்கள் அனைவருமே அதிர்ந்தார்கள், மேல வீதி ஆண்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது, பெண்களுக்கோ அதிர்ச்சியாக இருந்தது, சங்கமேஸ்வரனின் இதயம் ஒரு நொடி அதிர்ச்சியில் நின்று பின் வேகமாக துடிக்கலானது. பொன்முடிக்கு இந்த பேச்சுகள் கேட்டதில் அவர் மரக்கட்டை போல இருந்தார் அகத்தியனுக்கு எதுவுமே புரியவில்லை
”அப்பா ஊருக்கு நேர்ந்து விடறதுன்னா என்னப்பா அர்த்தம், இது என்ன புதுவிதமான தண்டனையா இருக்கு விளக்கம் சொல்லுங்கப்பா” என காரில் உட்கார்ந்து இருந்தபடியே அவரை உலுக்க அதில் அவரோ அவன் கேட்ட விளக்கத்தை சொல்ல அதில் அகத்தியன் அரண்டான்
”என்னது இப்படிகூட தண்டனை தருவாங்களா, அவள் மேல எந்த தப்பும் இல்லைப்பா, நான் போய் அவளை காப்பாத்தறேன்” என சொல்ல பொன்முடி அவனை பிடித்துக் கொண்டார் ஆனாலும் அவரின் கண்கள் கலங்கி கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. அதைக்கூட அகத்தியன் கண்டுக்கொள்ளாமல் வெளியே செல்ல பிரயத்தனப்பட்டான்.
சங்கமேஸ்வரனின் உடல் நடுங்கியது
நாச்சியாவிற்கு எப்படி இப்படியொரு தண்டனை தரமுடியும், அதுவும் நானா என் வாயால் என நடுங்கி ஒரு கட்டத்தில் அவர் நிலைகுலையும் நேரம் மக்களில் இருந்த ஆண்களோ தீர்ப்பு வராமலே நாச்சியாவை அவமானப்படுத்த முயன்றார்கள், அவளை நெருங்க கூட அஞ்சியவர்கள் இப்போது அவளின் கையை பிடித்து இழுப்பதும் அவளை தள்ளிவிடுவதுமாக இருக்க அவளோ அலறினாள். அவளின் அலறல் அகத்தியனுக்கு புது தைரியத்தை தந்தது எப்படியோ தந்தையின் பிடியில் இருந்து விடுபட்டு காரை விட்டு இறங்கி வெளியேறி மக்கள்