பிரின்ட் போட்டு கொடு, அதை ஊர் முழுக்க நான் தரனும் விடியறதுக்குள்ள இந்த வேலையை முடி” என உத்தரவிட அவனோ பயந்தான்
”பெரிய ஐயாக்கு மட்டும் இது தெரிஞ்சா என்னை உசுரோடவே விடமாட்டாரு என்னை விட்டுடு எனக்கு பயமாயிருக்கு”
”நான் சொன்னதை நீ செய்யலை பெரிய ஐயாவுக்கு முன்னாடியே என் கையால நீ உன் உசுரை விட்டுடுவ ஆகட்டும் சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு என்கிட்ட வா” என சொல்லிவிட்டு அவன் சென்றுவிட போட்டோக்காரன் பயத்துடனே பிரின்ட் போடலானான்.
மறுபக்கம் டிரைவர் வீராவையும் அவனது குடும்பத்தையும் சங்கமேஸ்வரன் மிரட்டிக் கொண்டிருந்தார்
”எங்கடா என் பேரன், கொன்னுட்டீங்களா எதுக்கு பணத்துக்காகவா இல்லை வேற ஏதாவது காரணமா சொல்லுடா” என அதட்ட வீராவோ அழுதான் கெஞ்சினான்
”ஐயா எனக்கு எதுவும் தெரியாதுங்கய்யா, சின்னய்யாவை நான் கூட்டிட்டுப் போகலைங்கய்யா, அவரேதான் வண்டி ஓட்டிக்கிட்டு போனாருங்கய்யா”
”வண்டியை அவன் ஓட்டிக்கிட்டு போனானா அப்ப டிரைவரா நீ என்ன செய்துக்கிட்டு இருந்த” என கேட்க வீராவோ தனது பிரச்சனையை சொன்னான்
பழைய டிரைவரின் விசயம் வெளிவந்தும் சங்கமேஸ்வரன் நம்ப மறுத்தார்
பொன்முடியோ
”வாய்ப்பிருக்கு அவனை நான் அடிக்கடி நம்ம வீட்டு முன்னாடி பார்த்திருக்கேன்ப்பா”
”பொன்முடி உனக்கென்ன புத்திக்கெட்டுப் போச்சா, சாதாரண ஒரு விசயம் அவனை வேலையை விட்டு எடுத்துட்டு இவனை வேலைக்கு வைச்சதுக்காகவா என் பேரனை அவன் பழிவாங்குவான்”