(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”பழிவாங்க காரணம் அவமானமா கூட இருக்கலாம், அவனை தேடிப்பிடிச்சி விசாரிச்சா உண்மை தெரிஞ்சிடும்“

  

”பொழுது விடிய இன்னும் 2 மணி நேரம் இருக்கு, அதுக்குள்ள அகத்தியன் எங்கிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்தாகனும்” என சொல்லிய சங்கமேஸ்வரன் தனது ஆட்களிடம் பழைய டிரைவரை அழைத்து வரும்படி கட்டளையிட அவர்களும் அவ்வேலையை செய்யச் சென்றார்கள்.

  

மறுபக்கம் பொன்முடி ஊரையே அலசி ஜல்லடை போட்டு தேடி களைத்துப் போய்விட்டார். அங்கமுத்து அனுப்பிய அடிஆட்கள் ஆங்காங்கு அலைந்தபடி இருக்கையில் அவர்கள் வசமாக பொன்முடியிடம் சிக்கினார்கள்.

  

”யார்டா நீங்க ஊருக்கு புதுசா எங்கிருந்துடா வர்றீங்க, உங்க பார்வையே சரியில்லையே” என வரிசையாக கேள்விகள் கேட்க அவர்களோ பயப்பட அவர்களை அப்படியே கொத்தாக அழைத்துக் கொண்டு சங்கமேஸ்வரன் முன் நிப்பாட்டினார் பொன்முடி

  

”அப்பா ஊருக்குள்ள இவனுங்க திருடனுங்க போல சுத்திக்கிட்டு இருந்தானுங்க, யார் என்னன்னு கேட்டா பயந்து ஓடப்பார்த்தானுங்க, அதான் மொத்த பேரையும் கூட்டிட்டு வந்திருக்கேன் நீங்க விசாரிங்கப்பா” என சொல்ல அந்த அடி ஆட்களைக்கண்டதும் அங்கமுத்து கதிகலங்கிப் போனார் ஆனாலும் சட்டென ஒரு யுக்தியைக் கையான்டார். சங்கமேஸ்வரன் விசாரனை நடத்துவதற்குள் தானாக முன் வந்து அந்த அடிஆட்களை அங்கமுத்துவே அடி அடி என அடித்து உதைத்து

  

”யார்டா நீங்க எந்த ஊர்டா இங்க என்னடா செய்றீங்க, என் மருமகன் அகத்தியனை பார்த்தீங்களா பார்த்தா சொல்லுங்கடா” என அவர் பாட்டுக்கு யாருக்கும் தன் மேல் சந்தேகம் வரக்கூடாதென்ற பாணியில் ஒரு கதையை உருவாக்க அதற்கு இணக்கமாக வந்திருந்த அடியாட்களும்

  

”எங்களை மன்னிச்சிடுங்கய்யா நாங்க ஊருக்கு புதுசு வழி தெரியாம சுத்திக்கிட்டு இருந்தோம்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.