இவரைக் கண்டு பயந்து நடுங்க அதில் அவரோ அவனை மிரட்ட அதில் உண்மையை உளறி வைத்தான் அதைக் கேட்டதும் பொன்முடிக்குஉடல் அதிர்ந்தது
”என்னது அகத்தியன் நாச்சியா வீட்ல இருக்கானா”
”ஆமாம்ங்க”
”போட்டோக்கள் எங்க கொடு” என கேட்க அவனும் தான் டெவலப் செய்து வைத்த போட்டோக்களை தர அதை வாங்கிப் பார்த்து அதிர்ந்தார்
”இது ஆண்டாள் நாச்சியாவேதான்” என உளறி பின் உஷாராகி அங்கிருந்த அனைத்து போட்டோக்களையும் எடுத்து அதை தீயிட்டு கொளுத்திவிட்டு இவ்விசயம் வெளியே தெரியக்கூடாதென போட்டோக்காரனை மிரட்டிவிட்டு அவசர அவசரமாக நாச்சியா வீடு நோக்கி விரைந்தார்.
அதற்குள் விடிந்தே விட்டது. விடிகாலையில் ஊரே எழுந்து தங்கள் வேலைகளை பார்த்த நேரம் டீக்கடையில் ஒரு சின்ன பொறி வெடித்தது அது அப்படியே புகைந்து புகைந்து ஊர் எங்கும் பரவியது, அது உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் மேல வீதியும் கீழவீதியும் சார்ந்த மக்கள் கும்பலாக நாச்சியா வீட்டின் முன் சென்று நின்றார்கள்.
இன்னும் அவள் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. அகத்தியனை பார்த்துக் கொண்ட காரணத்தால் அசதியில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த நாச்சியாவை அகத்தியனே அழைத்தான்
”நாச்சியா நாச்சியா” அந்த அழைப்பில் அவளும் சட்டென விழிப்பு வந்து அவனிடம் வந்தாள்
”இப்ப உங்களுக்கு பரவாயில்லையா” என கொட்டாவி விட்டபடி கேட்க அவனோ சிரிப்புடன்
”நான் நல்லாயிருக்கேன்” என சொல்லிவிட்டு தனது காயங்களுக்கு கட்டுப்போட்ட கட்டுக்களை அவிழ்க்க அவளோ அதிர்ந்தாள்