(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”அவன்கிட்ட ஒரு வேலையிருக்கு வா” என தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு சென்றான்.

  

செல்லும் வழியில் கார்கோடகனிடம் சிக்கினார்கள்

  

”டேய் இந்நேரம் உனக்கு இந்தப் பக்கம் என்ன வேலை” என கேட்க ஒருவன் உளறினான்

  

”அது வந்து போட்டாக்காரன் வீட்டுக்கு போறோம்“

  

”அர்த்த ராத்திரியில போட்டோக்காரன் கூட என்னடா வேலை”

  

”இல்லை சும்மா பார்க்கப் போறோம்”

  

”அடிவாங்காதீங்கடா உண்மையை சொல்லுங்க, சின்னய்யாவை எங்கயாவது பார்த்தீங்களா” என கோபத்தில் பொங்க அவர்களுக்கு அப்படியொரு பயம் வந்தது, உடனே நாச்சியா வீட்டில்தான் அகத்தியன் இருப்பதாகவும், அவர்களுக்குள் பலநாள் பழக்கம் இருப்பதாகவும் சொல்லிவிட கார்கோடகனுக்கு அதிர்ச்சியும் அதே சமயம் ஏதோ ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

  

”அதான் போட்டோக்காரனை கூட்டிட்டுப் போய் அவங்க ஒண்ணுமண்ணா இருக்கறதை போட்டோ எடுத்து பெரிய ஐயா கிட்ட காட்டினா, நாச்சியாக்கு தண்டனை கிடைக்கும் அதான் புறப்பட்டுப் போறோம்“

  

”நாச்சியாக்கு மட்டும் தண்டனையா ஏன் சின்னய்யாவுக்கும் தண்டனை தரவேணாமா“

  

”எது சின்னய்யாவுக்கா எப்படி, எதுக்கு? நாச்சியாதானே தப்பு செய்தா, அப்ப அவளை தண்டிச்சா போதாதா” என ஒருவன் அலற

  

”அதை நான் பார்த்துக்கிறேன், இதோட இந்த விசயத்தில நீங்க நுழையாதீங்க போங்க

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.