(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

இங்கிருந்து போங்கடா” என கார்கோடகன் விரட்ட அவர்களும் பயந்தோடினார்கள்

  

இம்முறை கார்கோடகனே போட்டோக்காரனை தேடிப்பிடித்து அவனிடம் ஏதோ ஒரு பொய் கதையை கூறி அவனை கையோடு நாச்சியா வீட்டிற்கு அழைத்துச் சென்றான். கார்கோடகன் மீதிருந்த பயத்தில் போட்டோக்காரனும் அவன் சொன்னதை செய்யலானான். அதே நேரம் அகத்தியன் வலியில் முனக அந்தச் சத்தம் கேட்டு அவனை பார்க்க வந்தாள் நாச்சியா

  

”சார் என்னாச்சி ரொம்ப வலிக்குதா” என கேட்க அவனோ

  

”பசிக்குது” என்றான் ஈனமாக அதில் அவள் உடனே மிச்சமிருந்த உணவை கொண்டு வந்து அவனிடம் தர அவனுக்கு கையில் அடிபட்டிருந்தால், கையை அசைக்க முடியாமல் போகவே சாப்பிட தடுமாற வேறு வழியின்றி அவனுக்கு நாச்சியாவே உணவு ஊட்டிவிட அதை ஜன்னல் வழியாக கார்கோடகன் கண்டு ஏளனச்சிரிப்பு சிரித்துவிட்டு போட்டோக்காரனுக்கு உத்தரவு இட அவனும் உடனே போட்டோ எடுத்தான் அதனால் உண்டான வெளிச்சமும் சத்தமும் நாச்சியாவிற்கு சந்தேகத்தை தந்தது

  

”யாரது” என கத்த கார்கோடகனும் போட்டோக்காரனும் ஒளிந்துக் கொண்டார்கள்.

  

அவளோ யாரது யாரது என கேட்டுவிட்டு எந்தச் சத்தமும் வராமல் போகவே பூனையோ எலியோ அல்லது மின்னல் ஒளியோ என நினைத்து அகத்தியனுக்கு ஊட்டி முடித்தாள் அவனோ இருந்த அசதியில் அவளின் மடியில் தலை சாய்க்க அவளுக்கு திக்கென்றது ஆனாலும் இரக்கப்பட்டு அவனது முதுகில் தடவிக் கொடுத்து மெதுவாக அவனை தலையணையில் படுக்க வைத்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அவ்வாறு அவள் செய்யும் போதெல்லாம் போட்டோக்காரன் போட்டோக்களை எடுத்து தள்ளினான்.

  

அவளோ தூக்க கலக்கத்தில் அதை பெரிதாக எண்ணாமல் உறங்கச் சென்றாள்.

  

கார்கோடகனோ போட்டோக்காரனை அழைத்துக் கொண்டு அவனது ஸ்டூடியோவுக்குச் சென்று

  

”இதப்பாரு நான் சொல்றதை நல்லா கேட்டு அப்படியே செய், எடுத்த போட்டோக்களை நிறைய

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.