“நாளைக்கு காலையிலே பத்து மணி போல கிளம்புவோம். சென்னைக்கு ஃப்ளைட் டிக்கட் கன்ஃபார்ம் ஆகிடுச்சு... நாளைக்கு இந்நேரம் சென்னையில நம்ம வீட்டுல இருப்போம்.”
விஜய்யின் கணீர் குரல் அடுத்த கட்ட திட்டத்தை அவர்கள் அனைவருக்கும் சொன்னது.
நடப்பது எல்லாம் கிருத்திகாவிற்கு கனவு போல இருந்தது... உண்மை என்று நம்பக் கூட அவளுக்கு பயமாக இருந்தது!
அன்று காலையில் கண் விழித்தப் போது அவள் யார் என்ன என்று எதுவுமே அவளுக்கு தெரிந்திருக்கவில்லை...
இப்போது அந்த கேள்விகளுக்கு பதில் இருந்தாலும் அவளுள் பல பல புதிய கேள்விகள் குழப்பங்கள் எழுந்திருந்தது...!
ஆனால், அவளுக்கு அவளின் 'ராஜ்' இருக்கிறான்! அவன் அவளை பார்த்துக் கொள்வான்! அவன் அவளுக்கு வேண்டிய தகவல்களை சொல்வான்...!
எந்த விதமான பெரிய முகாந்திரமும் இல்லாது கிருத்திகாவின் மனம் தியாகுவின் மீது அதீத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தது!
🌼🌸❀✿🌷
“என்ன மிருதுளா நீ பாட்டுக்கு சொல்லிட்ட? நாம சென்னைக்கு போனால், ஹோட்டலை யார் கவனிச்சுக்குறது???” வெற்றி மிருதுளாவிடம் கோபத்தை காட்ட மனம் இல்லாதவனாக பாதிக் கோபமும், பாதி இயலாமையுமாக கேட்டான்!
மிருதுளா பதில் சொல்ல தொடங்கும் முன்பே,
“வெற்றி, ஹோட்டலை பத்தி எல்லாம் நீ கவலைப் படாதே. பசங்களை வச்சு நான்