(Reading time: 6 - 12 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

கவனிச்சுக்குறேன். இரண்டு வாரத்துக்குன்னு வர சொன்னால் மங்கம்மாவும் ஒத்தாசைக்கு வருவா... நான் பார்த்துக்குறேன். நீங்க இரண்டு பேரும் சென்னைக்கு போய் எல்லா விபரமும் சரி பார்த்து நிலாவை விட்டுட்டு வாங்க...” என்றாள் ராஜம்மாள்

  

அம்மா! நிலாவை விட்டுட்டு வரதை பத்தி என்ன பேச்சு இப்போ? எனக்கு என்னவோ எதுவோ சரியில்லைன்னு தோணுது...”

  

வெற்றி, குடும்பம்னு இருந்தா பிரச்சனை இருக்க தான் செய்யும். நிலாவைப் பார்த்த உடனே அந்த விஜய் முகம் மாறினதை கவனிச்ச தானே? அதே போல அவ கிடைச்ச சேதி தெரிஞ்ச உடனே குடும்பமே எப்படி வந்து நிற்குறாங்க பார்த்தீயா?”

  

எல்லாம் சரி தான்! ஆனால் அந்த தியாகு நம்ம நிலா கிட்ட ஒரு வார்த்தை கூட பேசலை. அந்த ஆள் சரியே இல்லை!“

  

என்னங்க இப்படி பேசுறீங்க? அவரே விருப்பப்பட்டு ஒத்தை கால்ல நின்னு அவளை கல்யாணம் செய்து கிட்டாராம்...” என்றாள் மிருதுளா!

  

என்னவோ போ...!”

  

அடுத்த அறையில் இருந்த கிருத்திகாவிற்கு அவர்கள் பேசியது தெளிவாக கேட்டது.

  

வெற்றி சொல்வது சரி தான்... தியாகு அவளிடம் பேசவே இல்லையே...! சொல்ல போனால் பேச முயற்சிக்க கூட இல்லை...!

  

ஏன்???

  

அவள் அவனை விட்டு விட்டு சென்றதால் வந்த கோபமா? அல்லது வேறு ஏதாவது காரணமா???

   

🌼🌸❀✿🌷

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.